பட்டினியாக கிடக்கும் தெரு நாய்கள்
—————————————————————————————————————–
திருமங்கலத்தில் சாலையில் இன்று(08-05-2020) மருந்து வாங்குவதற்காக பை ஒன்றை கையில் எடுத்து சென்று நடந்து கொண்டிருந்தேன். என் கையில் உள்ள பையைப் பார்த்ததும் ஏதோ உணவு என்று நினைத்து முதலாவதாக ஒரு நாய் வந்தது.அதனைத் தொடர்ந்து பல நாய்கள்… ஆனால் பை வெறுமையாக இருந்தாதாலும் பிஸ்கட் வாங்கிப் போடலாம் என்றால் கடைகளும் இல்லாததால் நாய்களுக்கு உணவளிக்க முடியவில்லை. பட்டினியாக இருந்த அவை கையில் பையைப் பார்த்ததும் உணவு கிடைக்கும் என்று என்னை எதிர்பார்த்து தொடர்ந்து வந்ததையும் ஆனால் எதையும் செய்ய இயலாது கையறு நிலை போல் உணர்ந்தேன்.
ஹோட்டல்கள் ,பலசரக்கு கடைகள், பழக்கட்டைகள் ,சிக்கன் கடைகள் அனைத்தும் திருமங்கலம் மூடியிருப்பதாலும்,
மக்களிடமும் வீணாகும் அளவிற்கு சமைப்பது இல்லை என்பதால் உணவுகள் வெளியே அதிகம் கொட்டப்படுவதில்லை என்பதாலும்
தெருநாய்களுக்கு உணவு கிடைக்கும் வழிகள் அனைத்தும் அடைபட்டுள்ளதால் தெருநாய்கள் பல பட்டினியாக இருப்பது தெரிகிறது.
ஆகவே இனி வீட்டில் இருந்து வெளியே வந்தால் பிஸ்கட் அல்லது கிடைக்கும் உணவை கையில் எடுத்துச் சென்று தெரு நாய்களுக்கு உணவளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். நீங்களும் வீட்டை வீட்டு வெளியே வரும் வேலை வந்தால் இதைச் செய்ய உங்களை வேண்டுகிறோம்.
சரிங்க அண்ணா…
திருமங்கலத்தில் எந்த கடைகளும் திறக்க வில்லையா.. எப்பொது திறப்பார்கள்
Already naan pannitu iruken anna. 🙏