[ad_1]
திருமங்கலம் வட்ட சட்டப் பணிக்குழு மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் சார்பாக திருமங்கலம் நகரில் இயங்கிவரும் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொது மக்களுக்கும் மற்றும் கிளைச் சிறைச் சாலையிலும் கபசுர நீர் வழங்கும் நிகழ்வு நேற்று(05-05-2020) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்சியில் மாவட்ட உரிமை நீதிபதி பாரதி, நீதித்துறை நடுவர் நீதிபதி அருன், கூடுதல் மாவட்ட நீதிபதி ரேணுகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்கள். திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அவரது உரையில் தமிழகத்திலேயே திருமங்கலம் வழக்கறிஞர்கள் தங்களைத் தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க பாராட்டக் கூடிய செயல் என கூறினார்.
நிகழ்ச்சியில் காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைகளை பொது மக்களுக்கு வழங்கினார். திருமங்கலம் நகர் காவல்துறை ஆய்வாளர் பரமேஷ்வரி மற்றும் கிளை சிறைச்சாலை ஜெயிலர் சந்தானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அரசு சித்த மருத்துவர் முத்து மற்றும் உதவியாளர் ராஜேஷ்குமாரின் மேற்பார்வையில் கபசுர நீரைத் தயாரித்து அவர்களே பொது மக்களுக்கு வழங்கியது சிறப்பம்சமாக விளங்கியது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அறிவொளி மற்றும் வழக்கறிஞர்கள் விஜய், சிவபாலாஜி, ஆனந்தராஜ், கருணாகரன், கண்ணன், காந்தி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்விற்கான கள ஏற்பாடுகளை தன்னார்வலர் வில்லியம் எபனேசர் செய்திருந்தார்.திருமங்கலம் வட்ட சட்டப் பணிக்குழு மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் சார்பாக திருமங்கலம் நகரில் இயங்கிவரும் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொது மக்களுக்கும் மற்றும் கிளைச் சிறைச் சாலையிலும் கபசுர நீர் வழங்கும் நிகழ்வு நேற்று(05-05-2020) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்சியில் மாவட்ட உரிமை நீதிபதி பாரதி, நீதித்துறை நடுவர் நீதிபதி அருன், கூடுதல் மாவட்ட நீதிபதி ரேணுகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்கள். திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அவரது உரையில் தமிழகத்திலேயே திருமங்கலம் வழக்கறிஞர்கள் தங்களைத் தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க பாராட்டக் கூடிய செயல் என கூறினார்.
நிகழ்ச்சியில் காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைகளை பொது மக்களுக்கு வழங்கினார். திருமங்கலம் நகர் காவல்துறை ஆய்வாளர் பரமேஷ்வரி மற்றும் கிளை சிறைச்சாலை ஜெயிலர் சந்தானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அரசு சித்த மருத்துவர் முத்து மற்றும் உதவியாளர் ராஜேஷ்குமாரின் மேற்பார்வையில் கபசுர நீரைத் தயாரித்து அவர்களே பொது மக்களுக்கு வழங்கியது சிறப்பம்சமாக விளங்கியது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அறிவொளி மற்றும் வழக்கறிஞர்கள் விஜய், சிவபாலாஜி, ஆனந்தராஜ், கருணாகரன், கண்ணன், காந்தி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்விற்கான கள ஏற்பாடுகளை தன்னார்வலர் வில்லியம் எபனேசர் செய்திருந்தார்.
[ad_2]