1915ம் ஆண்டில் திருமங்கலத்தில் இயங்கிய ரல்லி பிரதர்ஸ் பருத்தி(பஞ்சு) ஆலை-அறிவ…


1915ம் ஆண்டில் திருமங்கலத்தில் இயங்கிய ரல்லி பிரதர்ஸ் பருத்தி(பஞ்சு) ஆலை-அறிவோம் திருமங்கலம் வரலாறு-
————————————————————
1915ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் வெளியிடப்பட்ட Madras District Gazetteers Madura என்ற நூலில் இரண்டாம் பாகத்தில் கீழ்கண்ட தகவல் கிடைக்கின்றது.

“திருமங்கலம் நகரத்தின் முக்கியத்துவம் அதிகரித்து தற்போது செழிப்பான நகரமாக மாறி உள்ளது.மேலும் இந்த தாலுகா பருத்தி மற்றும் நிலக்கடலை வியாபாரத்திற்கு மையமாக விளங்கியதால் திருமங்கலம் இரயில் நிலையத்திற்கு மிக அருகில் ஓர் பஞ்சாலையும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பஞ்சாலை ரல்லி சகோதர்களுக்கு சொந்தமானது, அவர்கள்
பருத்தி மற்றும் நிலக்கடலையை திருமங்கலத்தில் இருந்து மும்பைக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்”

Source: Madras District Gazetteers Madura Vol 2,Pageno 54
Publised Year: 1915

இதே பக்கத்தில் 1909ம் வருடம் முன்சீப் கோர்ட் மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கு மாற்றப்பட்ட செய்தியும் உள்ளது!

குறிப்ப்பிட்ட இந்த ரல்லி சகோதர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்த ஐரோப்பிய வணிகர்கள் ஆவர்.

இதுபற்றிய உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை கமேண்டில் சொல்லலாம்!

#திருமங்கலம்
#திருமங்கலம்மதுரை
#thirumangalam
#thiruamangalammadurai
#tirumangalam
#tirumangalammadurai


We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo