ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் ————————- இன்று திருவோணம் த…

ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்
————————-
இன்று திருவோணம் திருநாள்.
சேர,சோழ ,பாண்டியருக்கு முன்பு தமிழகம் ,கேரளம்,கர்நாடகம், ஆந்திரம் , துளுநாடு என 5 தேசங்களை ஆண்ட பேரரசர் மகாபலி சக்கரவர்த்தியாவார்.

மகாபலி ஆட்சியிலே
மாதம் மும்மாரி பொழிந்தது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்ததால் திருடர் பயம் இல்லை. நேர்மையான மக்கள் ,வளமான பூமி ,எல்லோருக்கும் சமமான நீதி, தவறாத செங்கோல் என
எல்லா மக்களும் இன்புற்று வாழ்ந்திருந்தனர்.

மகா சக்கரவர்த்தியும் தமிழருமான மாவலி அரசர் திரும்பி வரும் நாளை கேரளர்கள் ஓணம் திருநாளாக கொண்டாடி வருகின்றனர் அதேவேளை
விஷ்ணு ,தமிழரான மாவெலி மன்னரை வென்ற நாளை தமிழர்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடுவது பெரும் முரண்பாடு ஆகும்.

https://www.youtube.com/watch?v=4XsmZvalkUY

இனிமேலேனும் கேரளர்கள் போல் தமிழர்களும் ஓணத்திருநாளை மாவலி சக்கரவர்த்தியை வரவேற்கும் திருநாளாக கொண்டாட வேண்டும்! தமிழருக்கும் கேரளருக்கும் மற்றே எல்லா மக்களுக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Copyright of this video belongs to respective owners. Video shared here for educational purposes.


Thirumangalam Madurai
Logo