திருமங்கலம் ஏர்போர்ட் ரோட்டில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பி கே என் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஜீன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிவளாகத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் திரு.இமயபதி நாடார், செயலாளர் திரு அஷோக் குமார் நாடார்,மற்றும் பள்ளி உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் திருமதி.காருண்யா அவர்கள் சிறப்புரையாற்றினார். விழா நிறைவாக மாணவர்கள் தங்களின் சமூகக் கடமையை உணர்ந்து, தங்களின் பங்களிப்பாகக் கொண்டு வந்த 25 பூச்செடிகள், 25 மூலிகைச் செடிகள் ,20 பழமரக் கன்றுகள் என சுமார் 70 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
Good. Super.