திருமங்கலம் : கள்ளிக்குடி அருகே நாயக்கர் கால நான்குஅடி உயரமுள்ள வரிவசூல் சம்பந்த…


திருமங்கலம் : கள்ளிக்குடி அருகே நாயக்கர் கால நான்குஅடி உயரமுள்ள வரிவசூல் சம்பந்தமான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

மதுரை மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கள்ளிக்குடி அருகேயுள்ள மருதங்குடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக கள ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கிராமத்தை சேர்ந்த சந்தோசமணி என்பவர் கொடுத்த தகவல்களை தொடர்ந்து சோமிகுளம் கண்மாய் கரையில் இருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் உதவியோடு அந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் படிக்கப்பட்டன.

இது குறித்து வரலாற்று துறை பேராசிரியை டாக்டர் சிந்து கூறுகையில், பாண்டியநாட்டு பகுதியில் நாயக்கர் காலத்தின் சத்திரங்களை ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்கள் ஐஸ்வர்யா, விக்னேஸ்வரன், சிவமாலின்தேவி, பிரியதர்ஷன் ஆகியோர் என்னுடன் களஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பாண்டியர் காலத்தில் இந்த பகுதி வீரநாராயண வளநாடு என அழைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சோமிகுளம் கண்மாய் அருகே கிடைத்த நாயக்கர்கால கல்வெட்டு நான்கு அடி உயரமும் ஒரு அகலமும் கொண்டுள்ளது. கல்வெட்டில் ஊரின் பெயரும், சோமிகுளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயம் அதிகமாக நடைபெறும் காலத்தில் நன்செய் வரி, மழைப்பொழிவு குறைந்த வறண்ட காலத்தில் புஞ்சை வரி என ஒரே நிலத்திற்கு இரண்டு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு மூலமாக தெரியவந்துள்ளது.

நாயக்கர் அரசுக்கு இப்பகுதி வரிவசூலிப்பவர் மூலம் வசூலிக்கப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது. இந்த கல்வெட்டு தயாரிக்கப்பட்ட ஆண்டு மாதம் நாள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலமாக இந்த கல்வெட்டு 17ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதனை தெரிந்து கொள்ளலாம் என்றார்.திருமங்கலம், மார்ச் 23: கள்ளிக்குடி அருகே நாயக்கர் கால நான்குஅடி உயரமுள்ள வரிவசூல் சம்பந்தமான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

மதுரை மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கள்ளிக்குடி அருகேயுள்ள மருதங்குடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக கள ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கிராமத்தை சேர்ந்த சந்தோசமணி என்பவர் கொடுத்த தகவல்களை தொடர்ந்து சோமிகுளம் கண்மாய் கரையில் இருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் உதவியோடு அந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் படிக்கப்பட்டன.

இது குறித்து வரலாற்று துறை பேராசிரியை டாக்டர் சிந்து கூறுகையில், பாண்டியநாட்டு பகுதியில் நாயக்கர் காலத்தின் சத்திரங்களை ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்கள் ஐஸ்வர்யா, விக்னேஸ்வரன், சிவமாலின்தேவி, பிரியதர்ஷன் ஆகியோர் என்னுடன் களஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பாண்டியர் காலத்தில் இந்த பகுதி வீரநாராயண வளநாடு என அழைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள சோமிகுளம் கண்மாய் அருகே கிடைத்த நாயக்கர்கால கல்வெட்டு நான்கு அடி உயரமும் ஒரு அகலமும் கொண்டுள்ளது. கல்வெட்டில் ஊரின் பெயரும், சோமிகுளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயம் அதிகமாக நடைபெறும் காலத்தில் நன்செய் வரி, மழைப்பொழிவு குறைந்த வறண்ட காலத்தில் புஞ்சை வரி என ஒரே நிலத்திற்கு இரண்டு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு மூலமாக தெரியவந்துள்ளது.

நாயக்கர் அரசுக்கு இப்பகுதி வரிவசூலிப்பவர் மூலம் வசூலிக்கப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது. இந்த கல்வெட்டு தயாரிக்கப்பட்ட ஆண்டு மாதம் நாள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலமாக இந்த கல்வெட்டு 17ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதனை தெரிந்து கொள்ளலாம் என்றார்

#tamil #archeology #nadukal #kalvettu #nadukarkal #TholliyalThagalvalgal



We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo