சுங்குராம் பட்டியில் ஆபத்தை விளைவிக்கவிருந்த மின்கம்பம்
————————…


சுங்குராம் பட்டியில் ஆபத்தை விளைவிக்கவிருந்த மின்கம்பம்
———————————————

சுங்குராம்பட்டி கிராமத்தில் மின் கம்பம் ஒன்றின் அடிப்பகுதி சேதமாகியிருந்துள்ளதாகவும் ,ஐந்து முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதுமாக முறிந்து சாய்ந்து விழுந்துள்ளது.

நல்வாய்ப்பாக சாய்ந்த மின்கம்பத்தை அருகில் இருந்த வேப்பமரம் தாங்கி நிறுத்தியதால் உயிரழ்ப்பு தவிர்க்கப்பட்டதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மின்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் சில வீடுகள் மின்சார சேவை தடைபட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி மின்சாரம் தடைபட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதோடு இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.