150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்
——————————————
திருமங்கலம் விருதுநகர் சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ சர்ச் (நல்ல மேய்ப்ப்பர் ஆலயம்) குறித்த மிகவும் பழமையான புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதை உங்களின் பார்வைக்கு அளிக்கின்றோம்.

பார்க்க இணைப்பு 1: Seventy-five years in the Madura mission என்ற நூலில்
1852 மற்றும் 1871ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்திற்கான பிரிவில் இப்புகைப்படம் வெளியாகிருந்ததால் இப்புகைப்படம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நூல் வழி தெரிகிறது. இல்லை அவ்வளவு காலம் முன்னர் எடுக்கப்பட்டிருக்க முடியுமா என்று சந்தேகத்தை ஏற்பட்டுத்தி காலத்தை சற்றே உயர்த்தினாலும் கூட 1890களுக்கு பின்னால் இந்த புகைப்படத்தின் காலத்தில் கொண்டு செல்ல முடியாது.

வேட்டி மற்றும் தலைப்பாகையுடன் தோன்றும் மக்கள்.

புகைப்படத்தின் பழமையைக்கொண்டு இதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே எப்படிப்பார்த்தாலும் இப்புகைப்படம் 120 ஆண்டுகள் அல்லது 150 ஆண்டுகள் பழமையானது எனலாம். ஆகவே திருமங்கலம் நகரில் எடுக்கப்பட்ட மிகவும் பழமையான புகைப்படம் என்ற பெருமையை இப்புகைப்படம் பெருகிறது.

பார்க்க இணைப்பு 2: இதே காலகட்டத்தில் இந்த சர்ச்சின் ஓவியம் ஒன்று Annual report of the American Madura Mission வேறு ஓர் நூலில் கிடைக்கப்பெற்றது அதனை இப்பதிவின் இணைப்பு 2ல் காணலாம்.

இணைப்பு 3 – 2018ம் ஆண்டுக்கு முன்வரை இருந்த சர்ச்சின் பழைய தோற்றம். இது 150 வருடங்களுக்கு முன் இருந்த அதே தோற்றத்தில் இருந்துள்ளது.

இணைப்பு 4: 2021ம் வருடத்தில் சர்ச்சின் புதிய தோற்றம். மாற்றி வடிவமைக்கப்பட்ட சர்ச்சின் புதிய தோற்றம்.

தரவுகள்(ஆதாரங்கள்)
1-Seventy-five years in the Madura mission section year1852-1871 pageno254
2-Annual report of the American Madura Mission year 1900 page114

குறிப்பு:
திருமங்கலத்தில்
தலைவர்களின் புகைப்படங்கள். பொது நிகழ்ச்சிகள். உங்கள் வீட்டு முன்னோர்களின் புகைப்படங்கள்( 50 வருடம் முந்தையவை) ஆகியவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டு இச்செய்திகள் திருமங்கலம் மக்களிடன் கொண்டு செல்ல உதவுகிறோம்.
புகைப்படங்களை 96 77 310 850 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது நமது பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியாகவோ அனுப்பலாம்.

#Thirumangalam CSI Church Vintage Old Photo

7 thoughts on “150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச் ————————–…”
  1. அருமையான பதிவு நான் Pknபள்ளிமாணவன் 6ம்வகுப்பு ஆசிரியர் திரு அலைக்சாண்டார் சார் இந்தவளாகத்தில் குடியிருப்பில் அவர் குடியிருந்த நினைவு மலரும் நினைவுகள் மகிழ்ச்சி

  2. பாரம்பரியத்தை அழித்து மாற்றாமல் புதுத் தேவாலயத்தை உருவாக்கி இருக்கலாம்……

    இது என் தனிப்பட்ட கருத்து….

    யார் மனமும் இதில் புண்பட வேண்டாம்……

    “Heritage and legacy” leads to pride…….

    😐😐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *