திரு. த. அன்பழகன், I.A.S
மதுரையின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்.

ஐயாவின் பணி சிறக்க thirumangalam page மற்றும் திருமங்கலம் பொது மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்…

திரு.த.அன்பழகன், இ.ஆ.ப., அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராவர். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி பொறியியல் கல்லூரியில் சுரங்க பொறியியல் (Mining Engineering) பிரிவில் இளங்கலை பொறியியல் (B.E.) பட்டம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட (குரூப்-I) துணை ஆட்சியர் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் துணை ஆட்சியர் பயிற்சி முடித்த பிறகு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியுள்ளார். இவர், இந்திய ஆட்சிப் பணியாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு சென்னை சுற்று வட்டச்சாலை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை தாவரங்கள் மேம்பாட்டுக் கழகம் (TAMPCOL), பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் எல்காட் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார்.


5 thoughts on “திரு. த. அன்பழகன், I.A.S மதுரையின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர். ஐயாவின் பணி சிற…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *