வரலாற்றில் திருமங்கலம் -ஆங்கிலேயரும் -கட்டபொம்மனும் —————————…


வரலாற்றில் திருமங்கலம் -ஆங்கிலேயரும் -கட்டபொம்மனும்
—————————————————
விடுதலை போராட்ட வீரரான பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கார் கட்டபொம்மன் அவர்களுக்கு ஆங்கிலேயர் தூக்கு தண்டனையை உறுதி செய்த இடம் திருமங்கலம் அல்லது திருமங்கலம் நீதிமன்றம் என்பதை நீங்கள் இதற்கு முன் படித்திருக்கலாம்.

அதற்கும் முன்பே திருமங்கலத்தில் ஆங்கிலேயரின் முக்கிய நிர்வாக கேந்திரமாக திருமங்கலம் செயல்பட்டுள்ளது

இராபர்ட் கால்ட்வெல் எழுதி 1881ம் ஆண்டு வெளிவந்த “(மெட்ராஸ் பிரசென்சியில் இருந்த திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு ” என்ற நூலின் 153ம் பக்கத்தின் ஒரு குறிப்பின் மூலம் ஆங்கிலேயருக்கும், கட்டபொம்முவின் பிரதிநிதிகளுக்கும் திருமங்கலத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது தெரியவருகிறது.

அந்த குறிப்பில் உள்ளதன் தமிழாக்கத்தை கீழே கொடுத்துள்ள்ளோம்

“கட்டபொம்மு நாயக்கர் மற்றும் சிவகிரி பாளையக்காரர் சார்பாக அவர்களது வக்கீல்கள்( பிரதிநிதிகள்) திருமங்கலத்தில் காத்து இருந்தனர்.
அவர்கள் தங்கள் எஜமானர்கள் (கட்டபொம்மு நாயக்கர் மற்றும் சிவகிரி பாளையக்காரர் சார்பாக ) ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு 15,000 பகோடாக்கள் வழங்குவதற்கு உறுதிப்பத்திரம் (பாண்ட்) வழங்கினர். மேலும் கட்டபொம்மு நாயக்கர் மற்றும் சிவகிரி பாளையக்காரர்களின் கோட்டைகளை திரும்பப்பெற ஆங்கிலேயருக்கு 6000 பவுண்ட்கள் ( பிரிட்டிஷ் பவுன்ட்கள்) வழங்கவும் சம்மதித்தனர்”

ஆதார நூல்: A Political and General History of the District of Tinnevelly, in the Presidency of Madras (மெட்ராஸ் பிரசென்சியில் இருந்த திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு
நூல் ஆசிரியர்: Robert Caldwell (இராபர்ட் கால்ட்வெல்)
வெளியான வருடம்: 1881

அந்த நூலில் பாளையக்கார்கள் குறித்த நிறைய வரலாற்று தகவல்கள் இருந்தாலும் நாம் நமது திருமங்கலம் வரலாற்றை பற்றி மட்டும் இங்கு பேசுவதால் மற்ற விடயங்களை தவிர்த்துள்ளோம்.

தொடர்ந்து திருமங்கலம் வரலற்றை வெளிக்கொணர்வோம்!


Thirumangalam Madurai
Logo