11வது நாளாக *வான்நோக்கு நிகழ்ச்சி* திருமங்கலம் நகர், கீழப்பள்ளிவாசல் தெருவில் ஏற…


11வது நாளாக *வான்நோக்கு நிகழ்ச்சி* திருமங்கலம் நகர், கீழப்பள்ளிவாசல் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்பு தம்பிகள் முஜிபுர் மற்றும் ஹாலிது சிறப்பான முயற்சி எடுத்திருந்தார்கள்.. “தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருமங்கலம் கிளை” சார்பில் தலைவர் *சு.சங்கரன்* செயலாளர் *திருமதி. A.S.முத்துலட்சுமி*, இளம் அறிவியல் ஆர்வலர் *சாகர்* ஒருங்கிணைப்பாளர் *கா.காமேஷ்* ஆகியோருடன் களம் புகுந்தோம்.. காலைமுதல் கருமேகம் சூழ்ந்திருந்தாலும்.. *நிலவும், செவ்வாயும்* இரக்கத்தோடு தலை காட்டினார்கள்.. *வியாழனும்-சனியும்* முட்டிக்கொண்ட கோபத்தில் முன்கூட்டியே மேகத்துள் தரையிறங்கிவிட்டனர். தம்பி சாகர் டெலஸ்கோப் மூலம் வலைவிரித்து.. நிலவை சிக்கவைத்தான்.. குழந்தைகள்..பெண்கள்..பெரியவர்கள் என ஒரு பெரும் பட்டாளமே வரிசையில் நின்று கண்டு ரசித்தனர்.. செயலாளர் முத்துலட்சுமி பாடிய அறிவியல் பாடல்வரிகளை.. நிகழ்ச்சி முடிந்தும் குழந்தைகளின் முணுமுணுப்பில் தெருவெல்லாம்.. *டும்..டும் கல்யாணம்* என எதிரொலிப்பதை கேட்கமுடிந்தது.. காமேஷின் *துளிர் இல்லம்* விதைப்பும் சிறப்பாய் முடிந்தது..தலைவர் சங்கரன் அவர்கள் செய்துகாட்டிய டிஜிட்டல் வானவியல் ஜாலம் தெருவெல்லாம் வைரலானது ஆன்ட்ராய்டு ஆப்பாக.. தம்பி முஜுபுரின் நன்றியுடன் நிகழ்ச்சி முடிந்தது.. அடுத்து துவங்கியது ஆட்டத்தின் இரண்டாம் பாகம்.. என் அருமை மாணவிகள்.. *மகள்களாய்.. தாய்களாய்* மாறிய தருணம்.. *உமர் மற்றும் கன்சுல்* தங்கள் குடும்பத்தோடு ஒரு திருவிழா வெளிச்சத்தோடு வரவேற்று எங்கள் வயிற்றையும்.. மனதையும் இன்ச் இடைவெளி இல்லாமல் அன்பாலும்.. அறுசுவை அன்னத்தாலும் இட்டு நிரப்பியே விட்டனர்.. வாழும்போதே.. எனக்கு சொர்க்கத்தை காட்டியவர்கள் இவர்கள்.. பாசத்தை பஞ்சமில்லாமல் பகிர்ந்து.. இன்றைய பனிவிழும் இரவை இளகச்செய்துவிட்டனர்.

_அன்பும்..நன்றியுமாய்.. முத்துகிருஷ்ணன்.


Thirumangalam Madurai
Logo