100 ரூபாய்க்கு தரமான டீ-சர்ட்கள் -உசிலை சாலையில் தீபாவளி விற்பனைக்கு
———–…


100 ரூபாய்க்கு தரமான டீ-சர்ட்கள் -உசிலை சாலையில் தீபாவளி விற்பனைக்கு
—————————————————-
ஏற்கனவே நமது திருமங்கலம் பக்கத்தில் ஹைதிரபாத் பிரியானி கடை பற்றிய பதிவை பார்த்திருப்பீர்கள்!
இவர் உசிலம்பட்டி சாலையில் கார்த்திகேயேன் சைக்கிள் மார்ட் அருகில் சாலையோரத்தில் தீபாவளியொட்டி டீ-சர்ட் கடை போட்டுள்ளார்.

இதை பற்றிய தகவல்களை நமது வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பியிருந்தார்.

அவர் அனுப்பிய டிசர்ட் புகைப்படங்களை பார்த்தோம் நன்றாகவே இருந்தது.
இருப்பினும் திருமங்கலம் பற்றிய வணிக செய்திகள் தொடர்ந்து வெளியிட்ட போதும் ஓரிரு கடைகளின் பொருட்கள் மீது செய்தி வெளியிட்ட நமக்கே பின்னாளில் சிறிது திருப்தி இல்லாத காரணத்தால்
முடிந்தவரை இனி செய்து வெளியிடுவதற்கு முன்
நேரில் சென்று ஒரு முறை பார்த்த பின் பதிவிடுவோம் அப்படி பதிவிட்டால் நம் அனுபவத்தையும் சேர்த்து பதிவிடுவோம் அதுவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

இதற்காக நேற்று(09-10-2020) மாலை உசிலை சாலை சென்றிருந்து டீசர்ட்களை பார்த்தோம்

ரூ100க்கு காலர் இல்லாத டீசர்ட்கள்
நிறைய வண்ணங்களில் நிறைய டிசைன்கள்
மென்மையான பருத்தி துணியில் செய்யப்பட்டவை- ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருந்தன.

தினசரி உபயோகத்திற்கு மிகவும் ஏற்றவை விழாக்காலங்களில் கூட அணியலாம்

நாங்களே பார்த்தோம். தனிப்பட்ட முறையில் நாங்களே தினசரி உபயோகத்திற்காக 5 டீசர்ட் வரை வாங்கினோம். மிக்க மகிழ்ச்சி!

உங்களுக்கும் வாங்க வேண்டுமென்று தோன்றினால் கடைக்கு சென்று பாருங்கள்.வாங்குங்கள் .பொருள் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்!

கடைக்கு செல்லும் போது நமது திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் இச்செய்தியை பார்த்தோம் என்று குறிப்பிடுங்கள். விற்பவருக்கும் அது சந்தோசமாக அமையும் விற்பனை விலையிலும் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கலாம்.

ஒருவேளை கடையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் கடைக்காரின் தொடர்பு எண் 98946 97605

குறிப்பு:
இந்த வணிக பதிவு முற்றிலும் இலவசமாகவே வெளியிடப்பட்டுள்ளது. நல்ல பொருட்களை ஆதரிக்க வேண்டும் அது நமது திருமங்கலம் மக்களுக்கு பயன்படும் என்று எண்ணத்தில் தான் பதிவிட்டுள்ளோம். இது குறித்து உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.