[ad_1]
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு என்பதால் இன்று சனிக்கிழமையே மீன் வாங்கி சமைக்க /ஸ்டாக் வைக்க
சோழவந்தான் ரோடு (பனை மர நிறுத்தம் அருகில் ) உள்ள மீன் கடையில் இன்று கூடிய கூட்டம்.

புகைப்பட உதவி:
திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்.

கடையில் நாம் பல முறை சென்று பார்த்து அறிந்து கொண்டது
—————————————————————

தினமும் தூத்துகுடி போன்ற கடல்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் தினமும் சரக்கு வண்டிகளில் தினமும் இரவு 7 மணிக்கு மற்றும் 9 மணிக்கும் வருகின்றன. இதனால் பல்வேறு விதமான மீன்கள் புத்தம் புதிதாக கிடைக்கின்றன. விலையும் குறைவு.

மொத்த விலைக்கும் கிடைக்கின்றது.சில்லரை விற்பனைக்கும் கிடைக்கின்றது. திருமங்கலத்தில் மீன் வியாபார்கள் பலர் தற்போது இங்கு தான் மீன் வாங்கி சில்லரை விற்பனை செய்வது தெரிகிறது.

வீட்டு தேவைக்கு பொறுத்தவரை இரவு நேரத்தில் மாலை 7 மணிக்கு மேலும், காலையில் காலை 5.30 மணிக்கு மேலும் மீன்கள் கிடைக்கின்றன.

இரவில் சென்று வாங்கினால் காலை விலையை விட கிலோவிற்கு ரூ50-60 குறைவாக கிடைக்கும்.

கடல் மீன் வைகையில் கண்வாய்,இரால், நண்டு, கடல் கெண்டை,கடல் பாறை, முரல் ,உருட்டு முரல் , கிளி மூக்கு மீன் ,சூரை மீன்,நகரை எனும் சங்கரா மீன் போன்ற பல்வேறு கடல் மீன்களும் கிடைக்கின்றன(

கண்மாய் மீன் எனும் நன்னீர் மீன் வகைகளில் ரோகு,கெண்டை,விரால், பெரிய கெழுத்தி,சிலேபி போன்ற மீன் வகைகளும் கிடைக்கும்.

ஒரே ஒரு குறை
————
இக்கடையைப் பொறுத்தவரை ஒரே ஒர் குறை என்னவென்றால்
எல்லா மீன் வகைகளும் கடை திறந்திருக்கும் நேரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ஆனால் நண்டு மட்டும் வந்த 20 நிமிடங்களில் மொத்தமாக காலி ஆகி விடுகிறது.

ஆகவே நண்டு வாங்க விரும்பினால் சரக்கு வரும் போதே மாலை 7 மணிக்கே சென்று வாங்கி விடுவது நல்லது.

நண்டு கடலில் குறைவாக கிடைக்கும் காற்று காலம் என்பதால் டிமாண்ட் இருப்பதால்
சில்லரை விற்பனைக்கு வரும் வியாபாரிகள் நண்டு வகைகளை உடனுக்குடன் வாங்கி சென்று விடுகின்றனர் என்பதால் சொந்த தேவைக்காக வாங்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் தவிர இங்கு நண்டு கிடைப்பதில்லை.

அதே நேரம் இவர்களிடம் வாங்கி செல்லும் வியாபாரிகளிடம் கூடுதல் விலையில் நண்டு விற்பனைக்கு கிடைக்கின்றது.

வியாபாரிகளுக்கு கொடுப்பதோடு சில்லரை விற்பனைக்கும் கொஞ்சம் எடுத்து வைத்தால் சொந்த தேவைகளுக்கு இக்கடைக்கு வருபவர்களுக்கும் நண்டு கிடைக்கும்.

இது
குறித்து உங்கள் கருத்துக்களை கமேண்ட் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

குறிப்பு:
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN


[ad_2]

5 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *