திருமங்கலத்தில் 146 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடங்கியது
——————————————————————
திருமங்கலம் நகரில் சங்கிலி பறிப்பு,இரவில் கடைகளை உடைத்து திருடுவது ,ரவுடிகள் தகராறில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகள் நடைபெறுவதால் இவைகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்துவது என திருமங்கலம் காவல் துறை மற்றும் வர்த்தக சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இதனையொட்டி வடக்கே மறவன்குளம் தொடங்கி தெற்கே தெற்கு தெரு வரை, கிழக்கே விமான நிலைய சாலை முதல் மேற்கே சந்தை பேட்டை வரை என மொத்தம் 146 இடங்களில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறைக்கு திருமங்கலம் காவல் துறை, அரசு அமைப்பு, தன்னார்வலர்கள் , வர்த்தக சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் உதவியின் அடிப்படையில் அமையவிருக்கின்றது.
முதற்கட்டமாக 9 கேமராக்கள் பொருத்தப்பட்டு டிஎஸ்பி அலுவலக கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நேற்று செயல்பாடு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.உதயகுமார் துவங்கி வைத்ததோடு தனது பங்களிப்பாக ரூ 5 இலட்சம் நிதி வழ்ங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர், திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி ,வர்த்தக சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பு:
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN
புகைப்பட உதவி: திரு. பாபு(யமஹா) பாபு அவர்கள் ,திருமங்கலம்
சமூக ஆர்வலர் மாஸ்கோ செல்வம் திருமங்கலம் நகர் பகுதிக்கு கேமரா மாற்றுவதற்கு 300000 கொடுத்ததற்கு வியாபாரி சங்கம் மூலமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Thanks
Keep it up thanks
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.