திருமங்கலம் நகர்பகுதியில் தென்பட்ட கழுகு
———————————
#திரு…


திருமங்கலம் நகர்பகுதியில் தென்பட்ட கழுகு
———————————
#திருமங்கலம் நகர்பகுதியான சியோன் நகர் முதல் தெருவில் சர்ச் பின்புறம் தென்னை மரத்தில் அமர்ந்திருந்த கழுகு இன்று பார்வைக்கு கிடைத்தது.அது உங்கள் பார்வைக்கு. வெகு தூரத்தில் இருந்த கழுகை தொந்தரவு செய்யாமல் இருக்க தூரத்தில் இருந்தே படம் பிடித்தோம் ஆனால் கழுகுகளின் பரம வைரிகளான காக்கைகளோ ஒன்று சேர்ந்து இடைவிடாது கரைந்து கொண்டே இருந்தன.

நான் சிறுவனாக இருக்கும் போது காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்லும் போது அடர்ந்த புளியமரங்களின் பொந்துகளில் ஆந்தைகளும் , உச்சிகளில் கழுகுகளும் வயல்வெளியில் மயில்களும் , விதவதமான பறைவைகளும் முயல் போன்ற காட்டு விலங்களும் தொடர்ந்து தென்படும்.
அதேல்லாம் பழைய கதையாகி விட்டது. இன்று நகர்புறத்தில் கழுகை பார்ப்பது கூட அபூர்வமாகி விட்டது.

eagle spotted in #thirumangalam zion nagar