சிசிடிவிகள் பொருத்தப்பட்டு கொரானா கட்டுப்பாட்டு அறை மூலம் பல்வேறு இடங்கள் கண்காணிப்பு
————————————————————-
திருமங்கலத்தில் ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாக இருந்தாலும் மக்கள் பல இடங்களில் அலட்சியமாகவும் கூட்டமாகவும் இருப்பது தெரிகின்றது.
ஆகவே ஊரடங்கை இன்னும் தீவரமாக கண்காணித்து நடமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக திருமங்கலத்தில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட்டுள்ளது. மேலும் இவற்றை
கண்காணிப்பதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக சாலை மற்றும் தெருக்களில் நடமாடுவோர் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊரடங்கை மதிக்காமல் நடமாடுவோரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணித்து கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மைக் மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் கண்காணிக்கப்பட்டு காவல்துறை மூலம் நடவடிக்கையும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை நகராட்சி மூலம் எடுக்கப்படும் என தெரிகிறது.
ஆகவே மக்கள் சற்றே பொறுப்போடும் சமூக கட்டுப்பாடோடும் நடந்து கொள்ளுமாறும் வேண்டுகிறோம்!
இதை முன்னிட்டு நேற்று(22-04-2020) அன்று திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்(டி எஸ் பி) அவர்கள் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணித்து ஊரடங்கை மீறியோருக்கு எச்சரிக்கையையும் கண்காணிக்கும் பணி செய்யுவர்களுக்கு உரிய காவல்துறையினருக்க்கு வழிகாட்டுதலையும் வழங்கினார்
இந்த கேமரா பதிவு திருமங்கலம் தாலுகாக்கு உட்பட்ட கிராமங்களில் பொறுத்தி கண்கானிக்கபட்டால் சமூக கூட்டம் குறையும். எங்க கேட்கிரார்கள் கிராமத்தினர்.சமூக விளக்கை கடைபிடிக்க மாற்றாங்க. வீட்டில்இருப்போம் உயிரை காப்போம்.
Super super