நம் வீட்டருகில் உதவி தேவைப்படுவோருக்கு நாமாக சென்று உதவுவோம்!
————————————————————
இன்றைய இக்கட்டான சூழ்நிலைகளை நான் விளக்கிக் கூற வேண்டியதில்லை.
ஏற்கனவே ஓரிரு வாரங்களாக வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் தினசரி வேலை செய்து சம்பாதிப்போர் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளதால் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கையில் இருக்கும் சொற்ப பணமும் பல்வேறு குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கரைந்து போயிருக்கும்.
இந்த நிலையில் ஊரடங்கு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிவதால் அவர்களுடைய நிலை இன்னும் மோசமடையலாம்!
ஆம் நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டின் அருகில் உதவி தேவைப்படுவர்களை கண்டறிந்து உதவுவோம்!
அவர்களாக வந்து நம்மிடம் உதவி கேட்டால் செய்வோம் என்று நினைக்காதீர்கள்! வறுமையிலும் தன்மானத்துடன் வாழ விரும்பவர்கள் தங்கள் துயரத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்கவே விரும்புவார்கள் .
ஆகவே நம் வீட்டு அருகில் உள்ளவர்களை சந்தித்து அவர்கள் தினசரி சப்பாடுக்காக ,குழந்தையின் பாலுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை மெல்ல விசாரித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுகிறோம்.
நம்மிடம் என்ன இருக்கிறது என்று நினைக்காமல் இருப்பதை நாம் பகிர்ந்து கொள்வோம்!
பணமாகவும் கொடுக்கலாம் ,குழந்தைக்கான பாலாகவும் கொடுக்கலாம்! மனமிருந்தால் மார்க்கமுண்டு!
இருப்பதை பகிந்து கொள்வோம்! இதயமுள்ள மனிதராக வாழ்வோம்!.
நம்மிடம் உள்ள மனிதம் வெளிவரட்டும்! இறைவன் அருள்வானாக!