மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற…


மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண். 12661/12662, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 23.02.2023 முதல் 03.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. எலக்ட்ரிக்/டீசல் இன்ஜின் மாற்றம் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெறும்.

ரயில் எண். 16101/16102, சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் 28.02.2023 முதல் 02.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது

செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு.கெளதம் சரவணா

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo