பூம்பூம் மாட்டுக்காரன் —————– எத்தனை வருடங்கள் ஆயிற்று! பூம்பூம் கா…

[ad_1]
பூம்பூம் மாட்டுக்காரன்
—————–
எத்தனை வருடங்கள் ஆயிற்று!
பூம்பூம் காளை மாட்டினையும், அந்த மாட்டுக்கார்களயும் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.காளை மாட்டோடு வருவார்கள்,மேளமோ , நாதஸ்வரமோ இசைப்பார்கள் . மாட்டுக்காரர் நல்ல செய்தி சொல்வார் அதை ஆமோதிப்பது போல மாடு தலையை ஆட்டும் இதனாலேயே ஆமாம் சாமி போடுவர்களுக்கு பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டாதே என்று பெயர் வந்தது . சன்மானமாக அரிசியோ பணமோ பெறுவார்கள்.

எல்லோரும் முன்னேறி செல்லும்போது
அவர்கள் வாழ்வும் முன்னேற்றம் அடையவேண்டும் அல்லவா? இருந்தாலும் அந்த காட்சிகள் நம் கண்களை விட்டு அகலவில்லை.

வெகு அதியசமாக பல வருடங்கள் கழித்து இதே வருடத்தில்( 2023 ஆண்டில்) திருமங்கலம் மறவன்குளம் பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரரை பார்த்தேன். ஆனால் மாட்டுக்கார்களுக்கு பழைய உடை,அலங்காரம் போன்ற தோற்றம் இல்லை ,பழைய நல்வாக்கு சொல்லும் முறை அதற்கு மாடு தலையாட்டும் முறை ஏதும் செய்யவில்லை. அதனால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. மக்களுக்கும் நம்பிக்கையும் இல்லை நம்பிக்கையை தாண்டி மாட்டுடன் வந்து நல்வாக்கு சொல்கிறார்களே என்பதை நினைத்து பார்த்தும் கொடுப்பதும் குறைந்துவிட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது!

இந்த பதிவில் வரும் புகைப்படம் 2016ம் வருடம் திருமங்கலம் அரசு பதிவு அலுவலகம் எதிரே எடுக்கப்பட்டது.

“பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி…
டும் டும் டும் மேளம் தட்டி சேதி சொன்னான்டி…
அரிசி போட வெளிய வந்த பொண்ணப் பாத்தான்டி
அடுத்த மாசம் கல்யாணத்துக்கு
தேதி சொன்னான்டி…” – 1967ம் ஆண்டு வெளிவந்த “அதே கண்கள்” திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்

Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.

இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/

#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #திருமங்கலம்_மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai #thirumangalam_madurai #tirumangalam_madurai


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo