புத்தகம் வழங்குமாறு கேட்டுகொள்கிறோம்: திருமங்கலம், செங்குளத்தில் கலையரங்கு கட்…


புத்தகம் வழங்குமாறு கேட்டுகொள்கிறோம்:

திருமங்கலம், செங்குளத்தில் கலையரங்கு கட்டிடத்தில் மக்களின் முயற்சியால் சுதந்திர தினவிழா அன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நூலகத்தை திருமங்கலம் அரசு நூலகர் திறந்துவைத்தார். நூலகத்தில் புத்தகங்களின் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களிடமிருந்து புத்தகங்களை நன்கொடையாக நூலகத்தின் பொறுப்பாளர்கள் பெற்று வருகிறார்கள். நூலகத்திற்கு வரலாறு, இலக்கியம், அறிவியல், வரலாறு, சமூகம், அரசியல், மொழி சார்ந்த நூலகங்களை நன்கொடைகளை வாரி வழங்குமாறு பொதுமக்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இன்றைய நுகர்வு கலாச்சார சீரழிவுகளில் இருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் மீட்டெடுக்க நூல்கள் மட்டுமே உதவும் என்ற அடிப்படையில் இந்த நூலகம் துவங்கப்பட்டு உள்ளது. இத்தகைய நூலகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவரின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நூல்களை நேரடியாக செங்குளம் கலையரங்க கட்டிடத்தில் அமைந்துள்ள நூலகத்திலும் கொடுக்கலாம், அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டால் நேரடியாக வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளப்படும்…

தொடர்புக்கு:
7598607781
கண்ணையா. காவல் துறை(ஓய்வு)
7639120651
சங்கீதா ரமேஷ்( வழக்கறிஞர் )


1 Comment
  1. நல்ல பலனை கொடுக்கும் சிறந்த முயற்சி…! வாழ்த்துக்கள்…!

Leave a reply

Thirumangalam Madurai
Logo