திருமங்கலம் ராஜா சித்த மருந்தகம் மற்றும் சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்…


திருமங்கலம் ராஜா சித்த மருந்தகம் மற்றும் சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு இணைந்து தற்போது கொரோணா நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலையோரம் வாழ் மக்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் மிகவும் ஏழ்மையில் இருப்பவருக்கும், முதியவர்களுக்கும் தினமும் 350 நபர்கள் வரை உரிய அனுமதியுடன் மதிய உணவு வழங்கி வருகிறது.
தங்கள் பகுதியில் சாலையோரத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழ்மையில் வாழும் மக்களை 9360370763, 9965528012, 9944046431, 8122152025 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

திருமங்கலம் ஒருங்கினைந்த சமூக ஆர்வலர்கள் குழுவின் பேருதவியுடன் இக்களப்பணி நல்ல முறையில் நடைப்பெறுகிறது. இதற்க்கு உறுதுணையாக இருக்கும் ரெட் கிராஸ் நண்பர்களுக்கும், ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு அமைப்புக்கும், ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கத்துக்கும் , இதற்க்கு துணையாக நிற்க்கும் தாலுகா மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கும், காவல் துறை நண்பர்களுக்கும் திருமங்கலம் பொது மக்கள் சார்பாகவும், thirumangalam page முகநூல் பக்கம் சார்பாகவும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்…


2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. வாழ்த்துகள். இறைஅருள் பெறுவீர்கள்

Leave a reply

Thirumangalam Madurai
Logo