
[ad_1]
ஆனந்தா திரையரங்கு விடைபெறுகிறது
———————–
திருமங்கலத்தின் பழமையான திரையரங்கு! 1970ம் ஆண்டு வரை இது தான் ஆசியாவின் இரண்டாவது பெரிய திரையரங்கு. என பல பெருமைகளை கொண்டது நம் திருமங்கலம் ஆனந்தா திரையரங்கு!
மாடி கிடையாது ஆனா அது ஒரு குறையே கிடையாது!
மிகவும் உயரத்தில் இருந்து நீளமான கம்பியில் தொங்கும் ,பக்கவாட்டில் நீளும் மின் விசிறிகள் .
திரைக்கு முன் வரிசையில் பெஞ்ச் போட்டிருப்பார்கள் அதற்கு பின்னால் சீட் இருக்கும். பெஞ்ச்,சீட்டு போட்டிருந்தாலும் சிலர் திரையை ஒட்டி மண் இருக்கும் அதில் படுத்துக்கொண்டு அண்ணாந்து படம் பார்ப்பார்கள்! நாலா பக்கமும் கதவை திறந்து வைத்து மாலை நேர காட்சிகளில் செமையாக காத்து அடிக்கும்.
இன்று மல்டி பிளக்ஸ் தியேட்டரில் படம் பார்த்தாலும் அந்த சுவாரஸ்யம் ,ஈர்ப்பு இன்று இல்லை.
அந்த காலங்கள் திரும்பி வரபோவதில்லை.
காலம் சில காயங்களை ஆற்றும் .சிலநேரம் காயங்களை ஏற்படுத்தியும் செல்லும். திருமங்கலத்தின் முத்த மக்களுக்கு இது ஆறாத காயமாகவே இருக்கும்.
ஆனந்தா திரையரங்கு ! #திருமங்கலம் மக்களின் நீங்காத நினைவுகளில் இருக்கும்.
ஆனந்தா தியேட்டர் குறித்த உங்கள் அனுபவங்களை கமேண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!
படம் பகிர்வு: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள்

[ad_2]


விருதுநகருக்கு பஸ்ஸில் பயணம் செய்யும் போதெல்லாம் இந்த திரையரங்கில் என்ன படம் என்று பார்ப்பேன்..
Feeling nostalgic . Used to watch mgr movies with my friends . . Feeling sad . Big theatre
பெரிய ஷாப்பிங் மால் ஐநாக்ஸ் தியேட்டருடன் கட்டலாம்
ரயில்வே பாலம் வருவதாலா
அந்த காலத்தில் இரவில் சின்ன கடை வீதியில் உள்ள வீடுகளின் மாடியில் படத்தின் சத்தம் கேட்கும்
இந்தக்கால தியேட்டர்களின் டூவீலர், 4வீலர் பார்க்கிங் ஸ்டாண்ட் போல… அக்காலத்தில் தமிழகத்தின் தியேட்டர்கள் வரலாற்றிலேயே மாட்டு வண்டிகளுக்காக தனியாக ஸ்டாண்டு வைத்திருந்தது திருமங்கலம் “ஆனந்தா டாக்கீஸ்”
(அந்தக்காலத்தில் சுற்றுவட்டார கிராம மக்கள் படம் பார்க்க தொலைதூரத்திலிருந்து மாட்டுவண்டிகளில் குடும்பத்தோடு வருவார்களாம்)
கடைசியா 1998ல் பிரபுவின்
“பொன்மனம்”, 2006ல் அஜித் நடித்த “ஆழ்வார்” படங்கள் ஆனந்தா தியேட்டரில் பார்த்தது.. மறக்கமுடியாத நினைவுகள் …
காலங்கள் மாறினாலும்
சுவடுகள் மாறாது…
நான் கரிசல்பட்டி தான் இந்த திரையரங்கில் தான் வானத்தைப் போல படம் பார்த்தேன் இன்னும் அந்த நினைவுகள் அப்படியே மனதில் உள்ளது
Poovu Mannan நீங்க மதுரை யா
இந்த தியேட்டர்ல படம் பார்க்க போனா ஓரே ஆட்டமாக தான் பார்ப்போம் நண்பர்கள்களுடன்…திரைக்கு முன்னால் ஆடு வது பாடுவதும் மாக படம் பார்ப்போம் மறக்க முடியாத நினைவுகள்
மறக்க முடியுமா மலரும் நினைவுகளை.
1974ல இருந்து 1985 வரையும் ஆனந்தா மற்றும் மீனாட்சி தியேட்டர்களில் வீட்டுக்கு தெரியாமல் போய் விட்டு வரும்போது தண்ணிக்காரன் ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டு வந்த காலங்கள் மறக்க முடியாதது
Thenali was my first movie watched in this theatre with my friends
Icon of tirumanagalam 🥰
I Miss you.anantha.
அஜித் படம்னா ஆராவாரம் தான் 👍
பள்ளியில் படிக்கும் போது கூட்டிட்டு போவார்கள் பள்ளியில் இருந்து
ஆசியாவிலேயே மிகப்பெரிய இரண்டாவது தியேட்டர் எங்கள் ஊர் ஆனந்தா தியேட்டர் மென்மையான ஞாபகங்கள் இருக்கிறது அந்த தியேட்டருடன் 🥺🥺🥺🥺🥺
சந்திரமுகி பார்த்தது
நனும் எனது அப்பாவும் சேர்ந்து படம் பார்த்த கடைசி திரையரங்கம்
பார்வை ஒன்றே போதுமே!
எதிரில் இருந்த பாய்கடை புரோட்டாவும் சால்னாவும் !!!
We will definitely miss all the childhood memories!!! It’s a good landmark for many villages around Tirumangalam ,Farewell to Anantha Theatre!!!
Sattam oru iruttarai first flim in anantha theatre how sweet!!!!!
Yes
நான் எல்லா நடிகர் படம் பார்த்து இருக்கேன் ரொம்ப மிஸ் ஆகுற இந்த ஆனந்தா தியேட்டரை மறக்க முடியாது பா
Big screen theater. School time la maximum intha theater than kuditu povanga
In the therala naan tamilachi padam parthikkiran
Two dream factories of my town Anandha & Meenakshi in 70s & early 80s . Its heartening to know this. But the memories ever.
மாற்றம் செய்யப்பட்ட வேண்டும்
Yar vangunalum again renovate panni theater ah start panunga.
நான் நம்ம ஊரு ஆனந்தா தியேட்டரில் எனக்கு விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் சேரன் பாண்டியன் மற்றும் உரிமை குரல்.
அது மிகையாகாது உன்மை உன்மையான
நட்புடன் இருந்தார்கள் நன்பர்கள் உறவுகள் பாசம் நிறைந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இன்று அதை நினைத்து பார்த்தேன் பொற்காலம் 1970 முடிந்தது அந்த காலம் இனிமேல் திரும்பாது அண்ணாச்சி வணக்கம் அன்புடன் அணில் செல்வம் மதுரை நாட்டின் நலன் சார்ந்த தலைவர்கள் இனிமேல் வரப்போவதில்லை
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி இனிமேல் நாடு முழுவதும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் இந்தியா இருப்பது மக்களுக்கு புரியவில்லை இனிமேல் தான் நம்முடைய மக்களின் வாழ்க்கை முறைகள் கஷ்டம் ராமர் கோயில் சாமி ராமர் தான் நம்முடைய கடவுள் ஆறியார்கள் பிராமணர்கள் சமுதாயம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையை மாற்றி வாழவைக்கும் ராம் ராம் மோடி அமித்ஷா ஜூ
பத்து படத்திற்கு மேல் இந்த திரையரங்கில் பார்த்த ஞாபகங்கள்… என்றும் மனதில் நீக்கமற
நிலைத்திருக்கும்…..
My 1st movie in the theatre natpukka
Last movie poojai
My Last movie in that theatre was Kadhaluku Mariyaadhai
Yes i am in tmm … my family oda neriya movie poi parthurukom…. supera irukum…. sweet memories in my life ….. Anantha theater