ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டவல்- திருமங்கலம் சலூனின் சிறப்பு ஏற்பாடு
—————————————————————-
இன்றும் பெரும்பாலானோர் கொரானா பரவுகின்ற பயம் காரணமாக முடிவெட்ட ,சேவிங் செய்ய என அத்வசிய சேவையான சலூன் கடைகளுக்கு கூட செல்லாமல் இருந்து வருகின்றனர் .

அவர்களின் பயத்தை போக்கும் வகையில் முடிவெட்டும் போது திருமங்கலம் கனராவங்கி அருகில் உள்ள சந்தில் அமைந்துள்ள சரவணா மென்ஸ் பார்லரில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய டவல் பயன்படுத்தப்படுகின்றது.

பொதுவாக முடிவெட்ட செல்லும் போது முடி வாடிக்கையாளர்களின் உடல் மற்றும் ஆடையில் முடிகள் விழாமல் இருக்க டவல் அல்லது துணி கொண்டு போர்த்துவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரானா பரவி வருகின்ற காலத்தில் ஒரே டவலை வருகின்ற பலருக்கும் பயன்படுத்தும் போது கொரனா பற்றிய அச்சம் மக்களிடையே தொற்றிக் கொள்வது இயற்கையே!

இந்த அச்சத்தை போக்கும் வகையிலும் பாதுகப்பான முடிவெட்டுதலை உறுதி செய்தும் கொள்ளும் வகையிலும் முடிவெட்டும் போது ஒருவருக்கு ஒரே முறை போர்த்தக்கூடிய டவல் ( ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய -யூஸ் அண்ட் த்ரோ) டவல் பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் வாடிக்கையாளர்கள் உட்காரும் இருக்கைகள் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்படுவதோடு , முடிவெட்டும் ஊழியர்களுக்கு கையுறை,மாஸ்க் ,வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் ,பயன்படுத்தப்படும் கத்திரிக்கோல்கள் ,பிளேடுகள் போன்றவை உரிய முறையில் ஸ்டிரிலைஸ் செய்யப்படுகின்றன.

குறிப்பு:
ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட டவல் என்பதால் முடிவெட்டுதல் கட்டணத்தோடு சேர்த்து கூடுதலாக ரூ30 பெறப்படுகிறது.
இந்த டவலையே ரூ25 அடக்க விலை கொடுத்து வாங்குவதால் முடிவெட்டுவதோடு சேர்த்து ரூ30 கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் நம் திருமங்கலம் பேஸ்புக் பக்கத்திடம் தெரிவித்தார்.

ஆனால் கொரானா அச்சத்தை நம்மிடையே வராமல் இருக்கவும் பாதுகாப்பான நடைமுறைப் படுத்தவும் கூடுதலாக ரூ30 கொடுப்பது ஒன்றும் தவறில்லை.

மேலும் நமது பேஸ்புக் வாசகர்கள் பேஸ்புக் வாசகர்கள் முடிவெட்ட சென்றால் பேஸ்புக் பக்கத்தில் இச்செய்தியை பார்த்ததாக சொல்லி இந்த கூடுதல் கட்டணத்தில் ரூ10 தள்ளுபடி பெறலாம். வணிக நிறுவனங்களும் பயன்பெற வேண்டும் நமது பேஸ்புக் வாசகர்களும் சிறப்பு சலுகைகள் பெற வேண்டும் என்ற ஆசையில் வரும் காலங்களிலும் நமது பக்கம் மூலமாக நிறைய முயற்சி செய்யப்படும்.

வழக்கம் போலவே மக்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் தான் இந்த வணிகச் செய்தியும் இலவசமாகவே வெளியிடப்பட்டுள்ளது( என்ன திருமங்கலம் பேஸ்புக் பக்கம் “சரவணா மென்ஸ் பார்லரை” ப்ரொமோட் செய்கிறார்களோ” என்று எண்ணக் கூடாது என்று தான் இதனை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. வணிக

புகைப்படம் எடுப்பதற்காக படத்தில் வாடிக்கையாளர் முகமுடி அணியாமல் காட்டப்பட்டுள்ளது!
8 thoughts on “ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டவல்- திருமங்கலம் சலூனின் சிறப்பு ஏற்பாடு ———–…”
  1. அது எல்லாம் சரி தான் ஆனால் முடி திருத்துபவரின் கையில் கையுறை இல்லை என்பது வருத்தமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *