வரலாற்று வெளிச்சத்தில் திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி
——————————————————————————————————

திருமங்கலம் பற்றி இணையத்தில் தேடிய போது ஓர் அரிய செய்தி காணக்கிடைத்தது. அதாவது கி.பி 12ம் நூற்றாண்டில் திருமங்கலம் மற்றும் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி ஊர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்தோம்.

இச்செய்திகளைப் பார்ப்பதற்கு முன் சற்றே ஓர் வரலாற்று விளக்கம்

கி.பி 12ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் , குலசேகர பாண்டியன் ஆகிய இரு பாண்டிய சகோதர்களுக்கும் இடையே யார் அரசாள்வது என்கிற [போட்டி தோன்றியது

பாண்டிய இளவலான பராக்கிரம பாண்டியன் என்பவன் தனது சகோதரனுடனான போரில் அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத் துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர்கள் இலங்காபுரி என்பவன் தலைமையிற் பாண்டிய நாட்டில் புகுந்தனர்.

பராக்கிரம பாண்டியன் சிங்களவனை தனது துணைக்கு அழைக்க , குலசேகர பாண்டியன் சோழ அரசனின் உதவியை நாடினான் . இது பின்னாளில் பெரும் போராக மாறியது. இது முதலாம் சோழ- பாண்டிய -ஈழப்போர் என்று அழைக்கப்படுகின்றது.

இந்தப் போரைப் பற்றி தமிழில் நூல்கள் பல வெளிவந்துள்ளன. குறிப்பாக சோழர் வரலாறு எனும் நூலில் வரலாற்றிஞர் இராசமாணிக்கனார் சற்றே விரிவாக எழுதியுள்ளார்.

எனினும் இந்தப் போரில் திருமங்கலம் பற்றி எங்கும் பேசப்பட்டதாக தெரியவில்லை.

அதே நேரம் இணையத்டில் தேடியதில் சிலோன் யுனிவர்சிட்டி வெளியிட்ட ” From the Coḷa conquest in 1017 to the arrival of the Portuguese in 1505″ என்ற ஆங்கில நூலிலின் 502,503,504 ம் பக்கங்களில் திருமங்கலம் பற்றிய செய்திகளும் குறிப்பிட்ட ” முதலாம் பாண்டிய -ஈழப்போரில்” நமது திருமங்கலமும் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நூலில் உள்ள குறிப்புகளை அப்படியே கொடுத்து அதன் நமது தமிழாக்கத்தையும் கீழே கொடுத்துள்ளோம்! (பின்பு இதன் பின்பு உள்ள வரலாற்றை சற்றே விரிவாக கூறுவோம்) .

பக்கம் 502

“லங்காபுரா திருப்பாசேத்தியில் இருந்து முன்னேறி ரஜினா கோட்டையை பிடித்துக் கொண்டது.

குலசேகரன் (குலசேகர பாண்டியன்) திருமங்கலம் அருகில் இருந்த தொன்டைமான் பாதுகாப்பில் உள்ள காடுகளில் சென்று விட்டார்” லங்காபுரா , ஜெகத்விஜயன் தலைமையில் அங்கிருந்து புறப்பட்டு 12 மைல் தொலைவில் உள்ள மதுரைக்கு சென்றது

தலைநகரம்(மதுரை) வீர பாண்டியனுக்கு வழங்கப்பட்டது ”

பார்க்க படம் : 1

பக்கம் 503

“இழந்த தலைநகரை மீண்டும் மீட்க குலசேகரனால் (குலசேகர பாண்டியன்) புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொண்டைமான் அரசர் மற்றும் மற்றொரு ஆட்சியாளர் இவர்களது படை உதவியுடன் மங்கலத்தின் (திருமங்கலம்) மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். திருமங்கலம் (திருமங்கலம் தாலுகாவின் தலைநகரம் மதுரையில் இருந்து 15 மைல் (19 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது”

பார்க்க படம் : 2

பக்கம் 504

“மைத்துனர் தொண்டைமானின் பொறுப்பில் இருந்தது. மேலும் திருவில்லிப்புத்தூருக்கு படையெடுத்து சென்று கைப்பற்றிக் கொண்டான். குலசேகரமும் இரண்டு கொங்குகளும் (கொங்கு படைகளும்) திருமங்கலம் அருகே சாத்தனேரி எனும் சாத்தங்குடி பகுதியில் முகாமிட்டிருந்தன.

ஆனால் லங்காபுரி திரும்பி வரும் போது குலசேகரனின் இந்த முயற்சிகள் வீணில் முடிவடைந்தன”

பார்க்க படம் : 3

குறிப்பிட்ட குறிப்புகளில் நாம் கவனிக்க வேண்டியது

பக்கம் 503ல் மங்கலம் எனும் திருமங்கலம் என்ற ஊரில் நிறுத்தப்பட்டிருந்த பராக்கிரம பாண்டியர் படை மீது குலசேகர பாண்டியன் சார்பாக வந்த தொண்டைமான் அரசர் மற்றும் கொங்கு படைகள் தாக்குதல் நடத்தி கைப்பைற்றிய செய்தி காணப்படுகின்றது.

மேலும் பக்கம் 504ல் குலசேகர பாண்டியனின் மைத்துனரான தொண்டைமானாரின் சார்பு படைகள் திருமங்கலம் அருகே சாத்தனேரி எனும் சாத்தங்குடி பகுதியில் முகாமிட்டிருந்த செய்தியும் காணப்படிகின்றது.

மேற்கண்ட செய்திகளை வேறு வரலாற்றுத் தரவுகளுடன் ஆராயும் போது திருமங்கலம்,சாத்தங்குடி வரலாறு பற்றிய திரை மெல்ல விலகுகின்றது.அதிலும் குறிப்பாக சாத்தங்குடி பற்றிய வரலாறு வெளிச்சத்திற்கு வருகின்றது.

இவ்வரலாற்றுச் செய்தியில் திருமங்கலமும் ,சாத்தங்குடியிலும் படை நிறுத்தப்பட்டதிலிருந்து கி.பி12ம் நூற்றாண்டிலேயே திருமங்கலமும் ,சாத்தங்குடிக்கான வரலாறு தொடங்க ஆரம்பித்து விட்டது புரிகிறது.

குறிப்பிட்ட செய்தியில் படை உதவி செய்ததாகவும் பாண்டிய அரசனின் மைத்துனன் என குறிப்பிடப்படும் தொண்டைமான் அரசர் என்பவரின் மூலத்தை ஆராயும் போது சாத்தங்குடி மற்றும் பல வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கின்றன.

குறிப்பிட்ட செய்தியில் காணப்ப்படும் “தொண்டைமான் அரசர் ” என்பவர் சோழ அரசரின் தளபதியாகவும் அமைச்சராகவும் விளங்கிய பெருமான் நம்பி பல்லவராயர் என்பவர் ஆவார். இவர் சோழ அரசர்களின்இவர் அகம்படி இனத்தை சேர்ந்தவர்(இன்று அகமுடையார் என்று அழைக்கப்படும் சாதியினர்) என்பதும் சோழர்களின் அகம்படி நியாயம் படைகளுக்கு தலைவராக இருந்தது சோழர்களின் பல்லவராயன் பேட்டை கல்வெட்டுச் செய்தியின் மூலம் தெரிய வருகின்றது.

பார்க்க : படம் 4,5

இந்த பெருமான் நம்பி பல்லவராயர் என்பவரே சோழ அரசரால் பாண்டியர்களின் உள்நாட்டுப் போரில் குலசேகரபாண்டியன் சார்பாக போரிடவும் சிங்களப்படைகளை ஒடுக்கவும் அனுப்பப்பட்டார்.

குறிப்பிட்ட இவர்களின் முன்னோர் பல்லவ அரசர்களை ஒடுக்கியதால் பல்லவராயர் பட்டம் கொண்டு விளங்கியுள்ளனர் மேலும் பல்லவர்களின் பகுதியான தொண்டை மண்டலத்தை ஆண்டதால் இவர்கள் தொன்டை மான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதனாலேயே சிங்களரின் இந்தக் குறிப்பில் இவர் தொண்டைமான் அரசர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

சோழ நாட்டில் இருந்து அனிப்ப்பட்ட இவர் பாண்டிய நாட்டில் நுழைந்து திருமங்கலம் மற்றும் சாத்தங்குடியில் படை வீடு அமைத்துக் கொண்டு இருந்த செய்தி மேற்கண்ட செய்திகளில் மூலம் தெரிய வருகிறது.

குறிப்பிட்ட இந்த தொண்டைமானார் பல்லவராயனுடன் வந்த பல்லவராயர்,தொண்டைமான் பட்டம் கொண்ட உறவினர்கள் பலர் குறிப்பிட்ட சாத்தங்குடி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலைகொண்டுள்ளது பின்னர் வந்த காலங்களில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகள் மூலம் தெரிய வருகின்றது.

அதாவது குறிப்பிட்ட சாத்தங்குடிக்கு சற்றே தொலைவில் உள்ள மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் உள்ள பாண்டியர் காலத்து கோவிலான மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவிலில் உள்ள கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டுச் செய்தியில்

“தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையன்” எனும் தொண்டைமான் மற்றும் பல்லவரையன் பட்டம் கொண்ட அகம்படியர்( அகமுடையார் இனத்தவன்) கோவிலில் விளக்கு ஏற்ற கோவிலுக்கு ஆறு பசுக்களை தானம் அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியில் இருந்து மேற்கண்ட தொண்டைமான் பெருமான் நம்பி பல்லவராயர் போல மற்றொரு அகம்படியர் இனத்தவனும் இதே பகுதியில் பல்லவராயர் பட்டமும் தொண்டைமான் பட்டமும் கொண்டு இருந்துள்ள செய்தி அறியக் கிடைக்கிறது.

பார்க்க படம் : 6

அதே போல் சாத்தங்குடியில் கிடைத்த கி.பி.13ம் நூற்றாண்டு கல்வெட்டுச் செய்தி ஒன்றில் “விச்சாதிர பல்லவராயன்” என்ற பெயரில் ஒருவன் பற்றி குறிப்பிடப்படுகின்றது. இச்செய்தியிலும் பல்லவராயன் பட்டத்தில் ஒருவன் குறிப்பிடப்படுகிறான்.

பார்க்க படம் : 7,8

பாண்டிய நாட்ட்டில் இக்காலகட்டத்தில் பல்லவராயன் பட்டமும் தொண்டைமான் பட்டமும் அகம்படியர் இனத்தவர் மட்டுமே கல்வெட்டுச் செய்திகள் குறிப்பதைக் காட்டி இக்கல்வெட்டும் முன்னர் குறிப்பிட்ட பெருமான் நம்பி பல்லவராயனின் உறவினன் தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட இந்த தொண்டைமான்,பல்லவராயர் பட்டம் கொண்ட இவர்கள் பாண்டிய மன்னர்களின் நெருங்கிய உறவினர்களாக மாறியுள்ளது வரலாற்றின் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளது. இந்த சிங்கள நூல் செய்தியிலும் பாண்டிய மன்னனின் மைத்துனன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

அறியும் உண்மைகள்

கி.பி 12ம் நூற்றாண்டிலேயே குலசேகர பாண்டியன் ,பராக்கிரம பாண்டியன் இடையேயான சகோதர போரில் திருமங்கலம் மற்றும் சாத்த்ங்குடியில் படைகள் நிறுத்தப்பட்ட படைவீடாக பயன்படுத்தப்பட்ட செய்தி அறிய வருகிறது.

போருக்காக வந்த தொண்டைமான்,பல்லவராயர் பட்டம் பெற்ற குடியினர் சாத்தங்குடி உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்களில் அமர்ந்த செய்தி இங்கு கிடைக்கும் பல்வேறு கல்வெட்டுச் செய்திகள் மூலம் உறுதியாகின்றது.

இதன் மூலம் திருமங்கலம் நகரும் சாத்தங்குடி நகரும் கி.பி 12ம் நூற்றாண்டில் இருந்தே இருப்பதும் சாத்தங்குடி கிராமத்தில் எவ்வாறு மக்கள்

குடியேறினர் என்ற விவிரங்களும் கிடைக்கின்றது.

ஆதாரங்கள்

History of Ceylon: From the earliest times to 1505. Pt. 1

பல்வ்வராயன் பேட்டை கல்வெட்டு ,மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 1924

மதுரை மாவட்ட கல்வெட்டுத் தொகுதி 2 ,கல்வெட்டு எண் 210/2003 ,தமிழக அரசு வெளியீடு

மதுரை மாவட்ட கல்வெட்டுத் தொகுதி 2 ,கல்வெட்டு எண் 267/2003 ,தமிழக அரசு வெளியீடு


One thought on “வரலாற்று வெளிச்சத்தில் திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி ————————-…”
  1. திருமங்கலம் சாத்தங்குடியில் கள்ளர், அகமுடையார் சமூகங்களுக்கிடையிலான பகையும், இழப்புகளும் 80பதுகளில் தொடங்கி (மகர்நோம்பு திருவிழா) சமீப காலங்களில்தான் இரு சமூகங்களுக்கும் இடையே இயல்பு நிலை திரும்பியிருக்கிறது…
    இப்பதிவு அதை குலைக்கும் வகையில் இருக்கிறது….
    தவிர்க்கலாமே…
    எனது தாயாரின் பிறந்த ஊர் எனும் அக்கறையுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *