உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் முடங்கியுள்ளது மக்களின் அத்திய அவசியத் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியமே, திருமங்கலம் தாலுகா உச்சப்பட்டியில் குடியேறி வாழ்ந்து கொண்டு இருக்கின்ற முகாம் மக்களுக்கு உதவும் வண்ணமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் கேர்ஸ் சொசைட்டி மற்றும் திண்டுக்கல் அனுகிரஹா டிரஸ்ட் மூலம் மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணம் சுமார் 550 நபர்கள் பெறும் வகையில் திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் செளந்தர்யா நேற்று(09-05-2020) வழங்கினார்.
நிகழ்ச்ச்சியில் வட்டாச்சியர் தனலட்சுமி, தனி வட்டாச்சியர் முத்துப்பாண்டி, வருவாய் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிவாரணப் பொருள்களை வழங்க ஏற்பாடுகள் செய்த தென்தமிழக கப்புச்சின் மாநிலத் தலைவர் பாதர் சத்தியன், கேர்ஸ் சமூக சேவை மைய இயக்குனர் பாதர் ஜெகதீஸ், அமல அன்னை அலயப் பங்குப் பணியாளர் பாதர் எட்வர்ட் ராயன், புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதர் ஜான் கென்னடி, கள்ளிக்குடி திருஇருதய பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதர் லியோ, அமல அன்னை ஆலய ஒருங்கிணைப்பாளர் பிரைட்சிங் ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்… நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் வில்லியம் எபனேசர் செய்திருந்தார்.