நமது பக்கத்தில் பதிவிட்டிருந்த இணையத்தில் கிடைத்த வீடியோ( கொரானா பாதிக்கட்டவர்களை அல்லது பாதித்ததாக சந்தேப்படும் நபர்களை திருமங்கலம் கொல்லம்பட்டரை பகுதியில் ஆம்புலன்சில் ஏற்றும் வீடியோ ) பதிவை நீக்கி விட்டோம்!

மற்றவர்கள் எப்படி வேண்டுமானலும் செய்தியை பரப்பலாம்.ஆனால் நமக்கு சமூக பொறுப்பு உள்ளதாக நாம் உணர்கிறோம்!

நோயை தேடி யாரும் விரும்பி செல்வதில்லை. ஆகவே இணையத்தில் கிடைத்த இந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆம்புலன்சில் ஏற்றப்படும் மனிதர்கள் மீது காணப்பட்ட மத அடையாளங்கள், குறிப்பிட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த இட்டுச் செல்லும் என்பதாகும் , ஒருவரை ஒருவர் எளிதாக அடையளம் காணக்கூடிய நமது திருமங்கலம் போன்ற எளிய ஊரில் இது போன்ற விசயங்கள் பல்வேறு மனக்கசப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதாலும் அந்த வீடியோ பதிவை நீக்கி விட்டோம்.

காலங்கள் எல்லாக் காயங்களையும் ஆற்றும்!
உறுதியோடும் ஒற்றுமையோடும் இருப்போம்.
கொரானாவை வெல்வோம்! மனிதம் வெல்லட்டும்!

8 thoughts on “நமது பக்கத்தில் பதிவிட்டிருந்த இணையத்தில் கிடைத்த வீடியோ( கொரானா பாதிக்கட்டவர…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *