அலட்சியம் ஆபத்தாக முடியலாம்! திருமங்கலம் மக்களே கவனம்!
————————-…


அலட்சியம் ஆபத்தாக முடியலாம்! திருமங்கலம் மக்களே கவனம்!
—————————————————-

ஆபத்தான கொரானா பரவும் ஆபத்தினை அலட்சியம் செய்து விட்டு திருமங்கலத்தின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதை இன்று (13-04-2020 ) பார்க்க முடிகின்றது.

மம்சாபுரம் பகுதியில் மதிய நேரத்தில் கூட டீக்கடை,ஸ்வீட்கடை உள்ள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் வழக்கம் போல் திறந்துள்ளன.

அம்மா உணவகத்தில் பெரும் கூட்டம் கூடுகின்றது. இக்கூட்டத்தை சமூக இடைவெளி விட்டு நிறுத்த போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்!

திருமங்கலத்தில் பல்வேறு கடைகளும் முன்புறம் மூடிவிட்டு பின்புறமோ அல்லது பக்கவாட்டிலோ ஓரத்திலோ திறந்து கடை நடத்துகிறார்கள்!
டீக்கடைக்காரர்கள் இப்போது கேன்களில் டீ பிடித்து வியாபராம் செய்கின்றனர்.

உணவங்களில் கொரானா விரைந்து பரவும் என்பதை அலட்சியம் செய்திவிட்டு ராஜாஜி தெருவில் (விஸ்வநாத தாஸ் முகப்பில்) ஹோட்டல்களில் வியாபரம் படு ஜோராக நடப்பதாக தெரிகின்றது.

திங்கள் கிழமையே இப்படி கூட்டம் என்றால் ஞாயிற்றுகிழமைகளில் பெரும் கூட்டமே கூடுகின்றது.

குறிப்பு:
நாம் தொழில் நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல,ஆனால் இந்த ஆபத்தான சூழ்நிலையில் நாம் கடைகளை முறையாக அடைத்திருந்தால் தான் வரும்காலத்தில் கடைகளில் பொருள் வாங்குவதற்கு மக்கள் உயிரோடு இருப்பார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்!

புகைப்படம்: முன்சீப் கோர்ட் ரோடு இரட்டைக் குழாய் அருகில்