[ad_1]
சிலைகளின் பின்னால் உள்ள வரலாறு என்ன? கண்டறிய உதவுவீர்!
————————————————
திருமங்கலம் ராஜாஜி தெரு ,பெருமாள் கோவில் அருகில் கீழ்காணும் சிலைகள் பல காலங்களாக காணப்படுகின்றன. தற்போதைய புதிய சாலை பதிப்பின் போது பல்வேறு இடங்களில் இருந்த சிலைகள் ஒரே பிடத்தில் குறிப்பிட்ட இடத்தில் வைக்க்கப்பட்டுள்ளன.

சிலைகள் வரலாறு சொல்லும் என்பதால் இதன் பின்னால் உள்ள திருமங்கலம் வரலாற்றினை அறிய முற்படுகின்றோம்.இதில் உங்களுடைய பங்களிப்பையும் உதவியையும் நாடுகின்றோம்.

ஆகவே இந்த சிலைகளைப் பாருங்கள்! இச்சிலைகளைக் குறித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள்(இந்த சிலையில் உள்ள உருவங்கள் தெய்வ உருவங்களா அல்லது மனித உருவங்களா? இச்சிலையை நீங்கள் இதற்கு முன் பார்த்துள்ளீர்களா? பார்த்துள்ளீர்கள் என்றால் எந்த இடத்தில் வைத்து பார்த்துள்ளீர்கள்) போன்ற உங்கள் ஆலோசனைகளை இப்பதிவில் கமேண்டில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இச்சிலைகள் குறித்து நமது கருத்து
——————————–
இந்த மூன்று சிலைகளும் அமர்ந்த நிலையில் உள்ளன. பொதுவாக வாழும் மனிதர்கள் நின்ற நிலையில் தான் பழம் சிலைகளில் காட்சி தருவார்கள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இல்லை. ஆகவே இந்த மூன்று சிலைகளும் தெய்வச்சிலையாகவோ அல்லது மனிதர்களாக இருந்து தெய்வங்களாக உயர்த்தப்பட்ட சிலைகளாகவோ தான் இருக்க வேண்டும்.

இதை உறுதி செய்வது போல் முதலாவது மற்றும் மூன்றாவது சிலைகள் இடது காலை மடித்து அமர்ந்த நிலையிலும் வலது கையில் மழு போன்ற ஆயுதம் தாங்கியோ அல்லது அபயம் காட்டியோ அருள்வது போல் உள்ளதால் இந்த சிலைகள் தெய்வச்சிலைகள் என்பது உறுதி!

அதே நேரம் நடுவில் உள்ள சிலை சற்றே வித்தியாசமானது. இதில் இருக்கும் ஆண் உருவம் கரங்களை கூப்பிய நிலையில் (வணங்கிய நிலையில்) உள்ளது ஆகவே இது மனிதர்களாக வாழ்ந்தவரின் சிலை என்பது உறுதி அதே நேரம் அருகில் இருக்கும் பெண் உருவம் கைகளை உயர்த்திய நிலையில் உள்ளது.

ஆகவே இந்த சிலையில் இருக்கும் பெண் என்பவர் தெய்வமாகிப் போனவராகவும் அருகில் இருக்கும் ஆண் கரங்களைக் கூப்பி இவரை வணங்குவது போல் உள்ளதால் இது ஒரு மூன்னோர்களுக்கு எடுக்கும் நடுகல் என்பதாகலாம். ஆகவே இது ஒரு நடுகல் தெய்வமாகலாம்.

ஆனால் இந்த மூன்று சிலைகளுக்கும் மேல் பாறையிலே கூரை போன்ற அமைப்பு வெட்டப்பட்டு அதன் கீழேயே இதன் சிலைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு மூன்றுசிலைகளுக்கும் ஒன்றாக இருப்பதால் இச்சிலைகள் மூன்றும் ஒரே காலத்தில் வெட்டப்பட்டிருக்கலாம் அல்லது நெருக்காமான காலத்தில் அமைக்கப்பட்டுருக்கலாம்.


[ad_2]

3 Responses

  1. 25 வருடங்களுக்கு மேலும் அதே இடத்தில் கவனத்திருக்கிறேன்.. அதேபோல் யாரும் வழிபாடு செய்து பார்க்க வில்லை… நல்ல தேடலில் விடை கிடைக்குமா என பார்ப்போம்….

  2. இது பெருமாள் கோயில் அருகே உள்ளது .எனது கருத்து என்ன வென்றால். இந்த சிலைகள் காவல் தெய்வம் .ஸுரிஅய்யனார் மற்றும் ஸுரி பூர்னா புஸ்கலா தேவியின் சிலைகள் ஆக இருக்கும்
    . நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *