ஜூலை 1முதல் மார்கெட்டில் செயல்படும் காய்கறிகடைகள் உட்பட அனைத்து கடைகளையும், உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு பகுதியில் அனைத்து கடைகளையும் அடைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள காய்கறி கடைகள் பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றப்படுகிறது. மேலும் அரசு ஆண்கள் பள்ளியில் ஒருசில காய்கறிகடைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பலசரக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று டோர் டெலிவரி வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட், மதுரை பரவை மார்க்கெட் போன்று பெரிய அளவில் தொற்று பரவுவதை தடுப்பதற்காக அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுருளிநாதன் தெரிவித்தார்.