1930ம் வருடத்தில் வெளியிடப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை கா…


1930ம் வருடத்தில் வெளியிடப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை காவடிச் சிந்து” பாடலில் திருமங்கலம் பற்றிய குறிப்பு

—————————————————————————————————————

காவடிச் சிந்து என்பது குறிப்பிட்ட முருகன் கோவில் முருகன் மீது வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் தாங்கள் இருக்கும் ஊரில் இருந்து தாங்கள் வேண்டுதல் செல்லும் முருகன் கோவிலுக்கு காவடியை ஏந்தி கால்நடையாய் நடனமாடிக் கொண்டு செல்லும் போது பாடும் பாடலாகும்.

குறிப்பிட்ட இந்த “திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை காவடிச் சிந்து” என்ற சிறு நூல் 1930ம் வருடம் வெளிடப்பட்டதாகும். இதனை விருதுநகர் அருகில் உள்ள பாவாலி கிராமத்தைச் சேர்ந்த திரு.முத்து செல்லம்மாச்சாரி என்பவர் இயற்றி அதனை தனுஷ்கோடி செட்டியார்கள் வெளியிட்டு உதவியுள்ளார்கள்.

இந்நூலில் விருதுநகர் பாவாலி கிராமத்தில் இருந்து புறப்படும் காவடி முருகனுன் புகழையும் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ஊர்களின் சிறப்பையும் சொல்லிக் கொண்டே செல்கின்றனர்.

அப்படி செல்லுகின்ற போது வரும் வழியில் நம் திருமங்கலம் பற்றிய சிறப்புகளையும் குறிப்பிடுகின்றனர். இது வெளியூர்காரர்கள் பார்வையில் திருமங்கலத்தில் என்னவென்ன விசயங்கள் சிறப்பாக இருந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகின்றது.

இந்நூலில் உள்ள திருமங்கலம் பற்றிய கருத்துக்களை மட்டும் இப்பதிவின் புகைப்படம் 1ல் கொடுத்துள்ளோம். இதைப் பற்றி நம் கருத்துக்கள் கீழே

அதாவது

எங்கும் கியாதிபெற்ற வியாபாரங்கள் விற்கின்ற கடைத் தெருவும் – எங்கும் புகழ்பெற்ற வியாபாரங்கள் விற்கின்ற கடைத் தெரு என்பதால் திருமங்கலம் வியாபாரமும் கடைகளும் பல்வேறு ஊர்களில் பிரபலமாக இருந்துள்ளது.இது பலர் கேட்டு நாம் அறிந்த செய்தி என்ற போதிலும் 1930ல் வெளிவந்த நூலின் வாயிலாக இது உறுதி செய்யப்படுகின்றது.

வண்டிப்பேட்டை தனைக் கடந்து -வண்டிப்பேட்டை இது சரியாக எங்கு இருந்திருக்கும் ? சொல்ல முடிந்த்வர்கள் கமேண்ட் இடுங்கள்!

வாகுடன் செல்லும் வழியில் பாரடி பெண்ணே கச்சேரியுந் தோணுகிதோ – கச்சேரி என்பது நீதிமன்றம்(கோர்ட் ) ஆகும் முன்பு நீதிமன்றங்களை கச்சேரி என்று அழைப்பது வழக்கம்.

அதற்கடுத்த காரணமாய் பூச்சி நாடார் நந்தவனமும் மத்திசத்தில் பங்களாக்களும் வாகுடன் கடந்து நாமள் ஏகிடுவோமே – குண்டாற்று கரையில் இன்றும் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் தான் பூச்சி நாடார் நந்தவனம் என்பதா அல்லது இன்றைய பூச்சி நாடார் மண்டபமே இதில் குறிப்பிடப்படும் நந்தவனமா? , இதன் மத்தியில் பங்களாக்கள் அழகுடன் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளன? இந்த பங்களாக்கள் எவை?

இச்செய்தி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை இப்பதிவின் கமேண்டின் அளியுங்கள்! தொடர்ந்து திருமங்கலம் வரலாற்று மீட்பில் பயணிப்போம்! நன்றி!6 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
 1. கொல்லம்பட்டறை

 2. வண்டிப் பேட்டை என்ற இடம் இப்போது கொடி மரதெரு pknமெட்ரிக் பின்புறம் உள்ள தெரு இது தான் முன்பு குதிரை வண்டி கள் அதிகம் இருக்கும் பகுதி வண்டி காரன். பேட்டை. இது என் பாட்டி மற்றும் உறவினர் சொன்னது.

 3. நல்ல முயற்சி… எல்லோரும் முயறசி செய்தால் நிறைய திருமங்கலம் நகர பொக்கிஷங்கள் கிடைக்கும்….

 4. கொல்லம்பட்டறை வாய்ப்பு குறைவு.
  பிகேஎன் மெட்ரிக் பள்ளி அனேகமாக சரி என்று தோன்றுகிறது

 5. முருகன் கோவில் மைதானம்.

 6. இங்கு வண்டிப்பேட்டை என்பது தற்போதைய மீனாட்சி திரையரங்க இடத்தை குறிக்கும்
  இங்கு அக்காலத்தில் நாட்டு வண்டிகள் மாடுகள் இளைப்பாரும் இடமாக இருந்தது.
  கச்சேரி என்பது தாசில்தார் கச்சேரி (office )ஆனந்தா திரையரங்கம் பின்புறம்.
  இதை தாண்டி ரயில்வே கேட் கடந்து வலப்புறம் பூச்சி நாடார் வாரிசுகளின் தோட்ட வீடுகள் இருந்தன.
  அவர்களின் மல்லிகை தோட்டம் அதற்கு அடுத்தாற்போல் இருந்தது .
  இதுவே பூச்சி நாடார் ந்ந்தவனம்.
  இந்த தகவல் அனைத்தும் தந்தவர் எனது தந்தை
  திரு. PMKSSK. கருணாகரன் அவர்கள்

Leave a reply

Thirumangalam Madurai
Logo