அறிவோம் #திருமங்கலம் வரலாறு- திருமங்கலத்தில் திருமலை நாயக்க மன்னரின் நகரா முரச…


அறிவோம் #திருமங்கலம் வரலாறு- திருமங்கலத்தில் திருமலை நாயக்க மன்னரின் நகரா முரசு மண்டபம்

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் புகழ்பெற்றவரான திருமலை நாயக்கருக்கு ஶ்ரீவில்லிப்புத்தூரில் அரண்மனை இருந்தது. ஒவ்வொரு நாளும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இறைவனுக்கு உணவு படைக்கப்பட்ட பின்னரே தான் உணவருந்தும் வழக்கம் உள்ளவர்.

ஆகவே மீனாட்சி அம்மன் கோவிலில் இறைவனுக்கு உணவு நெய்வேய்த்தியம் செய்தியை அறியும் வண்ணம் மதுரை கோவிலில் இருந்து ஶ்ரீவில்லிப்புத்தூர் அரண்மணை வரை நகரா மண்டத்தை உருவாக்கி அம்மண்டபங்களில் ஒலி எழுப்பி அதன் மூலம் இச்செய்தி மன்னரை வந்தடையும் படி செய்யப்பட்டது.

அதாவது மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் மண்டபம் அமைக்கப்பட்டு அங்கு நகரா எனும் ஒருவகையான மேளம் அடிக்கப்படும்.
அந்த சத்த்ததைக் கேட்ட குறிப்பிட்ட தொலைவில் உள்ள மற்றொரு மண்டபத்தின் பொறுப்பாளன் அவனுடைய நகரா மேளத்தை அடிப்பான்.
இவ்வாறு மதுரையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு ஶ்ரீவில்லிப்புத்தூர் வரை கிட்டத்தட்ட இன்றைய கணக்குப்படி (75 கி.மீட்டர் தூரம்) செய்தி பரப்பப்பட்டது.

அன்று இன்று போல் வாகனம் ,தொழிற்சாலைகள் ,நெரிசல்கள் ஏதும் இல்லாததால் இவ்வாறு அடிக்கப்படும் மேளச் சத்தம் சில மைல் தூரம் வரை கேட்கும் என்பதால். குறிப்பிட்ட ஒவ்வொரு மைல் தூரத்திற்கும் நகரா எனும் இந்த வாத்தியம் அடிக்கும் மண்டபங்கள் கட்டப்பட்டன.

அவ்வாறு அமைக்கப்பட்ட நகரா மண்டங்களில் ஒன்று திருமங்கலம் ,செங்குளம் பகுதியில் இருந்த செய்தியை பிரான்சிஸ் என்ற ஆங்கிலேயர் தனது “madras district gazetteers madura” என்ற நூலில் 1906ம் வருடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்டபம் தற்போது செங்குளம் பகுதியில் உள்ளதா என்று தெரியவில்லை.ஊரட்ங்கு அமலில் இருப்பதால் இதை தேடிச் சென்று புகைப்படம் எடுக்கவில்லை.செங்குளம் ஊரைச் சேர்ந்தவர்கள் இருந்தால் இம்மண்டபத்தின் புகைப்படத்தையோ அல்லது மேலதிக தகவல்களை கமேண்டில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

ஆதாரம்: நூல்: madras district gazetteers madura-volume 1 ,Page number 330 (Reference Attachedas image screenshot)

thirumalai naicker nagara mandapam at senkulam village of #thirumangalam source book madras district gazetteers madura volume 1 page number 330


3 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. Tகுண்ணத்தூரில் ஒரு மண்டபம் உண்டு

  2. Wow you are really great.

  3. நண்பரே நான் செங்குளம் தான்.நீங்கள் கூறுவது போல பலங்கால மண்டபங்கள் இந்த பகுதியில் எதுவும் இல்லை.

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo