
தீடீரென பனிக்குள் மூழ்கிய திருமங்கலம்
———————–
கடந்த 1 மாதத்திற்கும் மேலாக திருமங்கலத்தில் பனி விழுவதை நீங்களே பார்த்திருக்கலாம்.
ஆனால் இன்று காலை ஓர் அமானுச நிகழ்வு போல திருமங்கலம் நகரை பனி கவ்வியது.
இன்று(08-02-2023) காலை 4.55 மணிக்கு மேல் வானத்தில் இருந்து திருமங்கலம் நகரை வானத்தில் இருந்து புகை போல பனி திருமங்கலம் நகரை சூழத்தொடங்கியது.
அதை பார்த்த போது சுந்தர் சியின் “இருட்டு” படத்தில் வரும் காட்சிகள் தான் நினைவுக்கு வந்தது.
அது ஓர் அற்புத காட்சி அதை நான் பார்த்தேன் அதற்கு முன் திருமங்கலம் நகரில் அப்படி பனி புகை போல சூழ்வதை நான் பார்த்ததில்லை. ஆனால் துரதிஷ்டமாக அந்த காட்சியை நான் புகைப்படம் எடுக்க முடியவில்லை
அதேநேரம் உசிலை சாலை மகளிர் காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள மீனாம்பிகை ஸ்வீட்ஸ் உரிமையாளரும் எனது உறவினருமான திரு.சக்திவேல் எனக்கு போன் செய்தார் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.,புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டேன் ஆனால் அந்த நேரத்தில் அந்த பெரும் பனி விலகி குறைவான பனியே இருந்தது.
இருப்ப்பினும் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருந்தார். அவற்றின் ஓர் புகைப்படம் .அதற்காய் அவருக்கு நமது நன்றிகள்!