மிசஸ் பெர்கின்ஸ் -திருமங்கலத்தில் இளம் வயதில் இறந்த அமெரிக்க மிசனரி பெண்மணி
—————————————
திருமங்கலம் வரலாறு பற்றிய தேடல் செய்து கொண்டிருந்த போது மிசஸ் பெர்கின்ஸ் பற்றி அறிய முடிந்தது.
திருமங்கத்திற்காக மதப்பிரச்சாரத்திற்காக வந்த இப்ப்பெண்மணி திருமங்கலம் வந்த சில மாதங்களில் இறந்து போனார். இளம் வயதில் இறந்த இவரது புகைப்படமும் கிடைத்ததால் இது பற்றி நமது திருமங்கலம் மக்களுக்கு தெரியட்டுமே என்று எழுதுகின்றோம்.
மிசஸ் பெர்கின்ஸ் என்று அறியப்படும் இவரின் இயற்பெயர் சார்லோட்டி ஜே.டெய்லர் என்பதாகும். 21 டிசம்பர் ,1860ம் வருடம் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நகரத்தில் இவர் பிறந்தார்.
பால்டிமோர் பள்ளியில் மேல்படிப்பை முடித்த இவர்
தனது 14ம் வயது முதல் கிறிஸ்தவ மிசனரி (மதப்பிரச்சார) பணிகளை செய்து வந்தார்.
இவருக்கு மிஸ்டர்(திரு) பெருகின்ஸ் என்பவருடன்
24 ஜீன் 1885ம் வருடம் திருமணம் நடைபெற்றது.
கணவருடன் இணைந்து அமெரிக்காவிலும் ,இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மதப்பிரச்சாரத்தை மிசஸ் பெர்கின்ஸ் செய்து வந்துள்ளார்.
மிசஸ் பெர்கின்ஸ் இசையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகவும் ,கவிதை புனைபவராகவும் இறந்துள்ளார். தமிழ் மக்களிடம் ஈர்பை கொண்டிருந்த இவர் அவர்களுடன் தமிழில் பேசவும் முயன்றுள்ளார்.
இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதை இவர் எழுதிய கடிதங்களும் வாழ்க்கையை பற்றிய இவரது பார்வையும் உணர்த்துவதாக மிசனரி ஹெரால்ட் குறிப்பிடுகிறது.
ஒரு பக்கம் மிசனரி வேலையை செய்து வந்தாலும் நல்ல மனைவியாகவும் தனது இரு குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருந்துள்ளார்.
ஆனால் விதியின் விளையாட்டு. 1897ம் ஆண்டு தனது 37ம் வயதில் மிசஸ் பெர்கின்ஸ் இயற்கை எய்தினார்.
1898ம் வருடம் வெளிவந்த நூலில் கடந்த ஜனவரி மாதம் மிசஸ் பெர்கின்ஸ் இறந்தார் என்று குறிப்பிடுவதால் இவர் இறந்தது டிசம்பர் 1898ம் வருடம் ஜனவரியாக இருந்திருக்க வேண்டும்.
இறக்கும் போது இவருக்கு 37 வயது என்ற நடுத்தர வயதை தாண்டி இருந்தாலும் சராசரியான இறக்கும் வயதை ஒப்பிடும் போது இவர் இளம் வயதிலேயே இறந்துள்ளார் என்று கொள்ள முடியும்
திருமங்கத்தில் இறந்ததால் இவரது உடல் திருமங்கலம் நகரில் அல்லது மதுரையிலோ புதைக்கப்பட்டிருக்க வேண்டும் .இவரது உடலை புதைத்த இடம் பற்றியோ , மிசஸ் பெர்கின்ஸ் இறந்த காரணம் குறித்தோ நூலில் தெளிவாக இல்லை.
திருமங்கலம் வாழ் கிறிஸ்தவர்கள் இது குறித்து தெளிவுபடுதினால் நன்றாக இருக்கும்.
மேலதிக விவரம் தேவைப்படுவர்கள் இப்பதில் இணைத்துள்ள படத்தில் உள்ள குறிப்புகளை படித்து அறிந்துகொள்ளலாம்.
ஆதாரம்: The Missionary Herald 1898-04: Vol 94
Peaceful story
Write about great man arunachalsm hm and thangadurai pt master