
1891ம் வருடத்தில் திருமங்கலம் நகரின் மக்கள் தொகை
—————————–
கடந்த 2011ம் வருடம் நடந்த மக்கள் தொகை கணக்கீட்டின்படி திருமங்கலம் நகரில் வசித்த தோராயமான மக்கள் தொகை : 51,194
நடக்கின்ற 2022 ம் வருட காலத்தில் இது பெரும் எண்ணிக்கையில் அதிகரித்திருக்கும் இந்த விவரங்கள் இனி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வரலாம்.
ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு திருமங்கலம் நகரின் மக்கள் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்???
நூறு வருடம் முன்பு என்றால் 1922ம் வருடம் மக்கள் தொகை என்னவாக இருந்திருக்கும்???
100 வருடம் என்ன அதற்கும் முந்தைய கணெக்கெடுப்புகள் கூட கிடைத்திருக்கின்றன.
திருமங்கலம் தாலுகாவில் இருந்த திருமங்கலம் நகரின் மக்கள் தொகை வருமாறு
1891ம் வருடம் : 7616
1901ம் வருடம் : 8894
1911ம் வருடம் : 9810
ஆதாரம்: Madras District Gazetteers Madura
வெளியான வருடம்: 1915
ஒவ்வொரு 10 வருடங்கள் இடைவெளியில் நடந்த கணெக்கெடுப்பின்படி தோரயமாக ஒவ்வொரு 10 வருடமும் மக்கள் தொகை எண்ணிக்கை 1000 என்று கூடியுள்ளது.
அதாவது 1 வருடத்திற்கு 100 பேர் . இதற்காக பிறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கிறதோ என்று எண்ண வேண்டாம் .மருத்துவ வசதி பெரிதும் வளராத காரணத்தினால் என்னவோ இறப்பு விகிதம் அதிகரித்து ,வாழ்நாள் குறைந்திருக்கலாம்.
மருத்துவ வசதி 100 வருடங்களுக்கு முன்பை விட அதிகமாக முன்னேறிவிட்ட காரணத்தாலும் ,திருமங்கலம் நகர் முன்னேற்றம் மற்றும் கிராமப்புற மக்கள் நகரத்தை நோக்கி குடியேறிய காரணத்தாலும் தற்போது திருமங்கலம் மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது எனலாம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Intha மாதிரி details entha website la paakkalam சொல்லுங்க
Great 👍
Thank you 🙏