[ad_1]
2019ம் ஆண்டு நம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் சாத்தங்குடி கண்மாயில் ஓர் சிலை அமைந்திருப்பதாகவும் இச்சிலையின் அமைப்பையும் சாத்தங்குடி என்ற ஊரின் பெயரை கவனிக்கும் போது இது சாத்தன் எனும் வணிக சாத்துகளுக்கு தலைவராக அடையாளப்படுத்தப்படும் ஐய்யனார் சிலையாக இருக்க வேண்டும் என்றும்
குறிப்பிட்ட இந்த சிலையின் உருவமதியை கொண்டு கி.பி 12ம் காலத்திய சிலையாக இருக்கும் என்றும்
சாத்தங்குடி கண்மாயில் பழங்கால பானை ஓடுகள் மற்றும் எண்ணற்ற கற்கருவிகள் உள்ளதாக 2019ம் ஆண்டு நாம் வெளியிட்ட பதிவிலேயே தெரிவித்திருதோம்.
தமிழக தொல்லியல் அலுவலகம் வெளியிடும் ஆவணம் இதழ் 12ல் பார்த்துக்கொண்டிருந்த போது நேற்று தற்செயலாக அதில் சாத்தங்குடி பற்றி குறிப்பு இருப்பதை கண்டோம்.
சிலை குறித்தும்,கருவிகள் குறித்தும் நாம் சொன்ன கருத்துக்கள் தொல்லியல் வல்லுநர்களின் கருத்துக்களுக்கு அப்படியே பொருந்துகிறது .( குறிப்பு இப்பதிவின் 3 வது படத்தில்))
மிக்க மகிழ்ச்சி!
ஆனால் சாத்தங்குடி குறித்து சிறு குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது ஓர் ஏமாற்றம் தான்! நம் திருமங்கலம் பற்றிய வரலாற்று குறிப்புகள் அரிதிலும் அரிதாகஇருந்த போதும்
கடுமையாக முயற்சித்து இத்தகவல்களை மேலும் வழங்க உள்ளோம்!
திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புர வரலாற்றை அறிய விரும்புகிறீர்களா? உங்கள் பதிலை கமேண்டில் அளிக்கவும்.
[ad_2]
கண்டிப்பாக…
வரவேற்கத்தக்க முயற்சி… வாழ்த்துக்கள்
நமது நகரின் வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை தொடர்ந்து கண்டறிந்து செய்திகள் வெளியிடும் முயற்சிக்கு பாராட்டுக்கள்…
👏👏👏