திருமங்கலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் பழமையான புகைப்படம்
————————————————-
இதுவரை திருமங்கலத்தில் கண்டறியப்பட்டதிலேயே மிகவும் பழமையான புகைப்படம் இதுவே.1910களின் பின்னே எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
திருமங்கலத்தில் அன்று நடைபெற்ற சாதி சங்க உறுப்பினர்கள் அமர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம். சாதி சங்க உறுப்பினர்கள் என்றாலும் அன்றைய திருமங்கலம் பிரமுகர்களின் தோற்றம் , உடை அமைப்பு ,அலங்காரம் போன்ற பல்வேறு தகவல்களை அள்ளித்தரும் ஓர் அபூர்வ புகைப்படம் இதுவாகும்.
என்னைப் பொறுத்தவரை இப்புகைப்படம் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் ஆகும். இப்புகைப்படத்தை சில வருடங்கள் முன்பு சேர் செய்திருந்தோம் காலத்தின் தேவை கருதி இப்புகைப்படத்தை மீண்டும் பதிவு செய்கிறோம்.
இப்படி ஒவ்வொருவர் வீட்டிலும் செல்லரித்துப் போக வேண்டிய கட்டத்தில் விலைமதிப்புமிக்க புகைப்படங்கள் நிறைய உள்ளன. இவற்றை நமக்கு வாட்ஸ் அப் செய்தால் அப்பிரமுகர்களை அனைவரும் தெரிந்து கொள்ள முடிவதோடு #திருமங்கலம் வரலாறும் மீட்டெடுக்கப்படும்.
குறிப்பு:
இந்தப் புகைப்படத்தை நமக்கு காண அளித்து வெளியிடக் கொடுத்த திரு. AASS.காமராஜ்வேல் நாடார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
இது போல் உங்களிடம் இருக்கும் பழமையான புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி நமது திருமங்கலம் மக்களின் பார்வைக்கு அளிக்கலாமே!
புகைப்படங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 9677310850
Entha idam