செல்போன் டவரில் ஏறிய வாலிபர் மீட்கப்பட்டார்-10 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

———————————————————————————————–

திருமங்கலம் கணபதி நகர் பகுதியில் உள்ள செல்போன் டவர் ஒன்றில் இன்று காலை 11 மணி அளவில் உரப்பனூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறினார்.

இதனைக் கண்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து தாசில்தார்,ஆர்டி ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தீயணைப்பு துறை அதிகாரிகளும் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களும் பெருமளவில் குவிந்ததால் பெருமாள் கோவில் ,கணபதி நகர் பகுதியில் காலை முதல் பதட்டம் நிலவியது.

குறிப்பிட்ட வாலிபரை செல்போன் டவரில் இருந்து மீட்க இடைவீடாது தொடர்ந்து காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் பேசி வந்த நிலையில் சற்று முன் இரவு 8.15 மணி அளவில் குறிப்பிட்ட வாலிபர் மீட்கப்பட்டார்.

ஆகவே திருமங்கலம் நகரில் நீடித்து வந்த 10 மணி நேரப் போராட்டமும் பதட்டமும் முடிவுக்கு வந்தது!

குறிப்பிட்ட வாலிபர் நலமுடன் திரும்பியது மகிழ்ச்சி. வாலிபரை மீட்பதற்கு தொடர்ந்து முயற்சி எடுத்த தாசில்தார்.ஆர்டி ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் , காவல் துறையினருக்கும் , தியணைபுத் துறையினருக்கும் thirumangalam .org வெப்சைட் சார்பாகவும் , திருமங்கம் பக்கம் சார்பாகவும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

குறிப்பு:

இச்செய்தி குறித்து நிகழ்வு நடந்த காலை 11 மணிக்கே எங்களுக்கு தகவல் தெரிந்த போதும் நாங்கள் உடன் செய்தியை பேஸ்புக்கில் பகிரவில்லை.

செய்தியை உடனே பதிந்து குறிப்பிட்ட பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடி பதட்டம் அதிகரிப்பதை நாம் விரும்பாததாலும் குறிப்பிட்ட அந்த வாலிபர் நலமாக திரும்பி வரும் வரை செய்தி வெளியிட வேண்டாம் என்று நாம் எண்ணி இருந்ததாலும் நாம் செய்தியை உடன் வெளியிடவில்லை.

இப்பதிவில் உள்ள புகைபப்டங்கள் நிகழ்வு நடந்த காலை 11 மணிக்கு எடுத்தவையாகும்,

நிகழ்வு குறித்து எங்களை போனிலும் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

வேண்டுகோள்

நண்பர்களே! தற்கொலை எதற்கும் முடிவாகாது! வாழ்வதற்கு இருப்பதற்கு நமக்கு இருப்பது ஒரே வாய்ப்பு . ஆகவே இதை நாம் சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற பழக வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்வதற்கு முன் உங்கள் பெற்றோர் உங்களை வளர்க்க என்ன பாடுகளையெல்லாம் அனுபவித்து இருப்பார்கள் .நீங்கள் இல்லாது போனால் அவர்கள் எத்தனை துன்பத்திற்கு ஆளாவார்கள் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து செயல்படுங்கள்!

இது போன்ற முயற்சியை இனி எவரும் செய்ய முயற்சிக்க வேண்டாம்!

youth try to make sucide attempt at cell phone tower in #thirumangalam


2 thoughts on “செல்போன் டவரில் ஏறிய வாலிபர் மீட்கப்பட்டார்-10 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வ…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *