இது நடுக்கோட்டை ஜமீன் அரண்மனை புகைப்படமா ? அறிய உதவவும்!
———————–…


இது நடுக்கோட்டை ஜமீன் அரண்மனை புகைப்படமா ? அறிய உதவவும்!
——————————————————
ஆங்கிலேயரின் நூல் ஒன்றில் திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டை ஜமீன் பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.அதில் கி.பி 1845 மற்றும் 1860 கால கட்டத்தில் நடுக்கோட்டை ஜமீனை கண்டதாகவும் அவரிடம் பேசிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அக்கட்டுரையில் ஜமின் அரண்மனை படம் ஒன்று வெளியாகி உள்ளது. நமது பேஸ்புக் பக்கத்தில் நடுக்கோட்டை,மேலக்கோட்டை ,கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் இருந்தால் புகைப்படத்தில் காணப்படும் படம் போன்று நடுக்கோட்டை ஜமீன் அரண்மனை இருந்தாதா அல்லது இருக்கிறதா என்று விவரம் கூறவும்!

ஊரடங்கு இருப்பதால் நேரில் சென்று விசாரித்து அறிய முடியாததால் முகநூல் நண்பர்கள் அல்லது பெரியவர்கள் உதவியை நாடுகின்றோம்!

இந்த ஊருக்கு அருகில் உள்ளவர்கள் நடுக்கோட்டை,கீழக்கோட்டை,மேலகோட்டை ஜமீன் வீடுகளின் தற்போதைய படங்கள் அல்லது தற்போது படத்தை எடுத்து அனுப்பினால் இப்படத்துடன் ஒப்பிட்டு உண்மையை கண்டறிய முடியும்!

அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 9677310850