சிலைகளுக்கான புதிருக்கு விடை கிடைத்தது
————————————-
சென்ற மார்ச் 17ம் தேதி திருமங்கலம் பெருமாள் கோவில் அருகில் பல காலமாக இருந்து வரும் சிலைகளை ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சிலைகள் யாருடையது என்று கேட்டு நமக்கு அனுப்பியிருந்தார்.

அச்சிலைகள் அந்த சிலைகள் அங்கு இருப்பது குறித்தும் அச்சிலைகள் குறித்து நம்முடைய கருத்தையும் அப்பதிவில் குறிப்பிட்டுருந்தோம்.

இந்த நிலையில் திருமங்கலம் பற்றிய வேறு வரலாற்றுச் செய்திகளை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மேற்குறிப்பிட்ட சிலைகள் குறித்து ஒர் அபூர்வ தகவல் ஆங்கிலேயரின் குறிப்புகளில் இருந்து காணக்கிடைத்தது.

இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றிய திரு.பிரான்சின்ஸ் என்பவர் 1906ம் வருடம் வெளியிட்ட மதுரா கெஜட்டியர் என்ற நூலில் பக்கம் எண் : 330 ல் காணக்கிடைத்தது
(Madura Gazetteers written by Francis-Indian Civil Service-Year 1906)

இந்த நூலில் குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள ஆங்கிலப் பகுதியிம் நமது தமிழ் மொழியாக்கத்தை அப்படியே தருகிறோம்
(ஆங்கில மூலத்தை இப்பதிவில் இணைக்கட்டுள்ள புகைப்படம் 2ல் நீங்கள் படிக்கலாம்) .

“இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களில் பெயரிட்டப்படாத ஏறக்குறைய ஒரே மாதிரியான 7 சதி கல்களும் அடங்கும்.இவற்றில் சில டிராவலர்ஸ் பங்களாவின் வட கிழக்கு மூலையின் உலர்ந்த/காய்ந்த பகுதியின் கட்டிடப் பகுதியில் கிடைத்தன”

சரி இதை வைத்து எப்படி இந்த சிலைகள் தான் திருமங்கலம் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள சிலைகள் என்று நீங்கள் கேட்கலாம்.அதற்கும் விடை இருக்கிறது.

ஆங்கிலேயேர் தனது பதிவில் 7 சிலைகள் இருக்கிறன்றும் ஏறக்குறைய அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருமங்கலத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ள 7 சிலைகள் வேறு கிடையாது. ஆனால் புகைப்படம் 1ல் 3 சிலைகள் இருக்கலாம் இதே போல் மேலும் 3 சிலைகள் இதே பகுதியில் இப்போதும் உள்ளன.
7 சிலைகளில் 6 சிலைகள் தற்போது உள்ளன. ஒரு சிலையை மட்டும் காணவில்லை இல்லை வேறு எங்காவது இருக்கலாம்.

இந்த சிலைகள் உருவங்கள் சிறு வேறுபாடு இருந்தாலும் சிலைகள் மீதுள்ள தண்ணீர் வடியும் அமைப்பு அனைத்திலும் ஒன்றாக உள்ளது என்று நம் திருமங்கலம் பக்கதில் அன்றே நாம் சொல்லியிருந்தோம்.(பார்க்க புகைப்படம் 3)

இதைக் கொண்டே ஆங்கிலேயேர் குறிப்பிடும் அந்த 7 சிலைகள் தான் பெருமாள் கோவில் பகுதியில் காணப்படும் அந்த சிலைகள் எனலாம்.

எனினும் இச்செய்தியை மேலும் உறுதி செய்யவது என்னவென்றால் இச்சிலைகள் “சதிக்கல்” என்று அந்த ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளது தான்.
ஆம் இதே செய்தியை நாமும் சென்ற பேஸ்புக் பதிவில் சொல்லியிருந்தோம் -நாம் ஏற்கனவே பேஸ்புக் பதிவில் சொன்னதை அடைப்புகுறிக்குள் கீழே கொடுத்துள்ளோம்

( நடுவில் உள்ள சிலை சற்றே வித்தியாசமானது. இதில் இருக்கும் ஆண் உருவம் கரங்களை கூப்பிய நிலையில் (வணங்கிய நிலையில்) உள்ளது ஆகவே இது மனிதர்களாக வாழ்ந்தவரின் சிலை என்பது உறுதி அதே நேரம் அருகில் இருக்கும் பெண் உருவம் கைகளை உயர்த்திய நிலையில் உள்ளது.

ஆகவே இந்த சிலையில் இருக்கும் பெண் என்பவர் தெய்வமாகிப் போனவராகவும் அருகில் இருக்கும் ஆண் கரங்களைக் கூப்பி இவரை வணங்குவது போல் உள்ளதால் இது ஒரு மூன்னோர்களுக்கு எடுக்கும் நடுகல் என்பதாகலாம். ஆகவே இது ஒரு நடுகல் தெய்வமாகலாம்)

நாங்கள் அன்று சொன்னதை புகைப்படம் 3ல் ஸ்கீர்ன்சாட்டாகவும் அளித்துள்ளோம்.

ஆம் அன்று சிலையில் காணப்படும் அந்தப் பெண் ஒருவம் தெய்வ உருவமாகவும் அருகில் இருப்பவர் வணங்குவதால் இவர் தன் முன்னோரை வணங்கும் நடுகல் சிலையாக இருக்கும்.சிலையில் உள்ள பெண் உருவம் பெண்ணாக இருந்து தெய்வமானவர் என்பதையும் குறிப்பிட்டுருந்தோம்.

இந்தக் கருத்தும் ஆங்கிலேயரின் குறிப்புகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.என்ன ஒன்று சிலைகளைப் பற்றி பதிவிட்ட அன்று நமக்கு இந்தப் பெண் எதற்காக தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்பது தெரியாமல் இருந்தது.ஆனால் இப்போது அந்த குறிப்புகள் கொண்டு அந்தக் காரணம் இன்று புரிகிறது.

அதாவது ஆங்கிலேயர் இச்சிலையை சதிக்கல் என்று குறிப்பிடுவதிலிருந்து இச்சிலையில் உள்ள பெண் தனது கணவரை இழந்தவுடன் இந்தப் பெண் உடன்கட்டை ஏறியுள்ளாள் என்பதும் இவ்வாறு உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக மதித்து நடுகல் எழுப்பப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஒரு சிலை நடுக்கல்லாகவும் மற்றொரு சிலைகள் ஆண் ,பெண் இருவரும் உட்கார்ந்து தெய்வ நிலையில் காட்சி தருவதைக் காணும் போது இந்த சிலையில் உள்ள பெண் ஒருவம் உடன் கட்டை ஏறிய அந்த பெண்மணி என்பதும் அருகில் இருப்பவர் அப்பெண்ணால் தெய்வமாக்கப்பட்ட அவளது கணவர் என்பதும் தெரிய வருகிறது..

இச்சிலை எதைக் குறிக்கிறது என்ற புதிர் வெளிப்பட்டாலும் இந்த சிலை குறிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் என்ன? இந்த சிலை எந்தக் காலகட்டத்தைச் சார்ந்தது ? இச்சிலைகளை யார் டிராவலர்ஸ் பங்களா பகுதியில் இருந்து தற்போதுள்ள பெருமாள் கோவில் பகுதிக்கு எப்படி வந்து சேர்ந்தது என்ற பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இது குறித்து மேலும் சில கூடுதல் செய்திகள்
—————————————-
ஆங்கிலேயர் பிரான்சிஸ் இந்த சிலையை 1906ம் ஆண்டு இச்சிலையை பார்த்துள்ளார் ஆகவே இச்சிலை 1906ம் ஆண்டு முன்பானது என்பது உறுதி!

அதே போல் 1829 ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சட்டத்தின் மூலம் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முடிவுக்கொண்டு வந்தது.ஆகவே இந்தியாவெங்கும் இக்காலத்திற்குப் பின் சதி எனும் உடன்கட்டை ஏற தூண்டுவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் .கி.பி 1850க்குப் பின் இந்தியாவில் சதி வழக்கம் நடைபெறவில்லை எனலாம்!

ஆகவே இதைக் கொண்டும் நிச்சயம் இந்த சதிக்கல் அல்லது நடுகல் கி.பி1829ம் ஆண்டு அல்லது அதற்கும் முன்பானது என்பதை சொல்ல முடியும்.

குறிப்பிட்ட சிலையானது டிராவலர்ஸ் பங்களாவின் வட கிழக்கு மூலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் அதவது இவ்விடம் இன்றைய திருமங்கலம் நகராட்சியை ஒட்டிய இடமாகும்.

தொடர்ந்து வரலாற்றில் பயணிப்போம்!

வேண்டுகோள்!
வெளியில் சென்று புகைப்படம் எடுக்க முடியாதால் திருமங்கலம் குறித்த வரலாற்றை தீவிரமாக தேடி அனுபவங்களைக் கொண்டு வரலாற்றை வெளிக்கொணர முயற்சி செய்து வருகிறோம்! இப்பதிவு குறித்து உங்களுக்கு தெரிந்த தகவல் இருக்குமென்றால் தவறாமல் கமேண்டில் சொல்லுங்கள்! ஏனென்றால் நிங்கள் சொல்லும் ஒரு சிறு விசயம் கூட ஒர் பெரும் வரலாற்றை வெளிக்கொணர உதவலாம்! நன்றி!
3 thoughts on “சிலைகளுக்கான புதிருக்கு விடை கிடைத்தது ————————————- சென…”
  1. உண்மைதான் நண்பா. நமது மறவன்குளத்தில் கண்மாய் கரைஓரத்தில் உடையம்மள் கோவில் ( ராசி மகால் எதிர்புறம்)மறவன்குளம் பஞ்சாயத்து தலைவர் உயர் திரு.ராமு அவர்கள் இளநீர் கடைபக்கத்தில் உள்ளது. இங்கு இந்த சிலையை காணலாம். இன்னும் இந்த பலமையான கோவிலை அறிய மறவன்குளம் அய்யாவு பெயிண்டரிடம்(9751815045) விளக்கம் கோட்டால் இக்கோவிலின் வரலாறு தெளிவாக கிடைக்கும் நண்பா. திருமங்கலத்தின் பெருமையை உலகம் அறிய செய்வோம் நண்பா.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *