வளமான சமுதாயம்   அமைந்திட 
சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்களின் 
பனைக்கன…


வளமான சமுதாயம் அமைந்திட
சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்களின்
பனைக்கன்றுகள் பராமரிப்பு களப்பணி நேற்று(16-02-2020) காலை திருமங்கலம் நகர் மறவன்குளம் கண்மாய்
கரையில் நடைபெற்றது.

கடந்த இரண்டு வருடங்களில் மறவன்குளம் கண்மாய்க்கரை சுற்றிலும் சுமார் 3000 பனைவிதைகள் சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு, திருமங்கலம் நகராட்சி மற்றும் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள், பல்வேறு அமைப்புகள்,பல இயற்கை ஆர்வலர்கள் இணைந்து நடப்பட்டது.

இவ்வாறு நடப்பட்ட பனைவிதைகள் முளைத்து இளம்கன்றுகளாக உள்ள நிலையில் இவைகளை பராமரிக்கும் விதமாக பசுச்சாணக் கரைசல் தெளித்தும் பாதுகாப்பு செய்தும் களப்பணி நடைபெற்றது.

நமது நகரின் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான மறவன்குளம் கண்மாய்க்கரை பனைமரங்கள் சூழ்ந்து இயற்கை அரணாக விளங்கிட தொடர் பராமரிப்பு களப்பணிகள் மேற்க்கொள்ளவும் இன்று முடிவு எடுக்கப்பட்டது.

நேற்றைய களப்பணியில் சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் போஸ், செல்லமணி, ஜெயராஜ், செல்வராணி, கார்த்திக், இளம்களப்பணியாளர்கள் சிவகீர்த்தனா,
வெற்றிவேலன், வேணுமாதேவி ஆகியோர்கலந்துக்கொண்டனர்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இதுபோன்ற பசுமைக் களப்பணிகளில் தாங்களும் கலந்துக் கொள்ள தொடர்புக்கு-
த.சோம்நாத் 9360370763