திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப்பள்ளி கலாமண்டபம் திறப்பு விழா! அரிய புகைப்படம் Opening Ceremony of PKN Higher Secondary School Auditorium Rare Photo

கீழ்கண்ட இப்புகைப்படம் நமது பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலாமண்டபம்(கலையரங்கம்-முழுநேரமாக நூலகமாகவும் அவ்வப்போது கலையரங்கமாகவும் இருக்கும் இடம்) திறப்பு விழாவின் போது எடுத்த புகைப்படம்.இப்புகைப்படம் 1960களில் எடுக்கப்பட்டது.

1-thirumangalam-pkn-hss-school-auditorium-opening-ceremony-photo-rare

புகைப்படத்தில் உள்ளவர்கள்
புகைப்படத்தில் இருப்பவர்களை எளிதில் அடையாளம் காணவும் ,இடம் குறைவாக இருப்பதால் எண்களை அளித்திருக்கிறோம்

marked-thirumangalam-pkn-hss-school-auditorium-opening-ceremony-photo-rare( தெளிவான படத்திற்கு  எண் குறிப்பிடாத மேல் உள்ள புகைப்படத்தை பார்க்கவும்)

1)இராஜமாணிக்கம் நாடார்
2)தினகரசாமித் தேவர் -அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ)
3)PP.சிதம்பரம் நாடார்(  திருமங்கத்தின்  முன்னாள் நகர சபைத் தலைவராக பதவி வகித்தவர்.திருமங்கலம் பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா திரு.PPCS.இரமேஷ் பாபு நாடார் அவர்களின் தாத்தா)
4) திண்டுக்கல் பாலகுரு நாடார்(திண்டுக்கல்லில் பெரும் வணிகர்)
5) தருமன் நாடார்( திருமங்கலம் ரத்னா ஸ்டுடியோ உரிமையாளர்)
6)திரு.அருணாச்சலம் ( இவர் காலத்திலேயே இப்பள்ளியில் மிகத் திறமையான  நிர்வாகம் நடைபெற்று பள்ளி பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைந்ததாக் கூறப்படுகிறது.)
7)திரு.AAS.செல்வமணி நாடார்( திரு.AASS.காமராஜ் வேல் நாடார் அவர்களின் தந்தை -முன்னாள் நகரத் தலைவர்-காங்கிரஸ் கட்சி
முன்னாள் தலைவர்-அர்பன் பேங்க் ,திருமங்கலம்
முன்னாள் செயலாளர்-திருமங்கலம் வீடு கட்டும் சங்கம்
தலைவர் பராசக்தி பால்பண்ணை என பல்வேறு பதவிகளை வகித்தவர்(இவரைப்பற்றிய சிறப்புப் பதிவு விரைவில்)

8) அன்றைய மத்திய அமைச்சரவையில் உறுப்பினராக விளங்கியவர்,பெயர் தெரியவில்லை

நன்றி
இவ்வரிய புகைப்படத்தையும் அதன் தகவல்களையும்  நமது Thirumangalam.org இணையதளத்திற்கு வழங்கியவர், திரு.AASS.காமராஜ் வேல் நாடார் (செயலர்-பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) அவருக்கு திருமங்கலம் மக்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி!

குறிப்பு
புகைப்படத்தில் எங்களால்  பெயர் சொல்ல முடிந்தவர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறோம்.உங்களுக்கு இப்புகைப்படத்தில் உள்ள வேறு யாரையேனும் தெரிந்தால் கமேண்ட் செய்யவும்.புகைப்படத்தில் உள்ளவர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களை சொல்லுங்கள்.

உங்களிடம் இது போன்ற திருமங்கலம் பற்றிய அரிய புகைப்படங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்(அழைக்கவும்: 9994833115) அவற்றை நம்   வெளியிட்டு எல்லோருடைய பார்வைக்கு வைக்கிறோம்!

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo