திருமங்கலத்தில் 120 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட மிகப் பழமையான புகைப்படம்

வாசகர்களே இப்பதிவில் நீங்கள் காண்பது,திருமங்கலத்தில் 120 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.சொல்லப்போனால் இப்படத்தை திருமங்கலத்தின் முதல் புகைப்படம் என்று கூட குறிப்பிடலாம்(ஆம் திருமங்கலத்தின் இதற்கு முந்தைய புகைப்படம் இருப்பதாகத் தெரியவில்லை,இருந்தால் தகவல் தெரிவியுங்கள்!)

இந்த புகைப்படம் நிச்சயமாகவே ஒர் அரிய பொக்கிஷம் தான்,திருமங்கலம் குறித்த மிகப் பழமையான படம் என்பது மட்டுமல்ல,இது திருமங்கலம் நகரில் வாழ்ந்த பல்வேறு மனிதர்களின் நடை ,உடை,தோற்றங்களை அருமையாக படம் பிடித்துக் காட்டுகிறது.

கவனியுங்கள்: தலைப்பாகை,தோள் ஜரிகை துண்டு,சட்டையோடு இணைக்கப்பட்டிருக்கும் கடிகாரம்,டை,பெல்ட்,ஷீ ,கை வளை ,என அந்நாளில் நம் நகரின் பெரும் மனிதர்கள் அணிந்திருந்த நேர்த்தியான உடை, தோற்றம் என பல்வேறு தகவல்களை அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது!

 

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்: நாடார் உறவின் முறை சந்திப்பு(வருடம் 1900ன் தொடக்கம் அல்லது 1800களின் நிறைவுக் காலம்)

புகைப்படத்தில் இருப்பவர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. அவ்வாறு அடையாளம் காண முடிந்தவர் திரு.A.A.Sundara Nadar(மேலிருந்து மூன்றாவது வரிசையில்,வலது புறம் மூன்றாவதாக கோட் ,தலைப்பாகை அணிந்து கையில் புத்தகம் வைத்திருப்பவர்,உங்கள் வசதிக்காக இவரை கீழ் உள்ள புகைப்படத்தில் பெயரிட்டுக் காட்டியுள்ளோம்)

புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள திரு..A.A.சுந்தர நாடார் ,திரு.A.A.S.S.காமராஜ்வேல் நாடார்(செயலர்,திருமங்கலம் பி.கே.என் பள்ளி) அவர்களின் தாத்தா ஆவார்.திரு.A.A.S.S.காமராஜ்வேல் நாடார் அவர்களே இந்த அரியப் புகைப்படத்தை நம் Thirumangalam.org தளத்திற்கு அளித்து நம் திருமங்கலம் மக்கள் கண்டு அறியும் படி அளித்துள்ளார்.அவருக்கு திருமங்கலம் மக்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி!

We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo