திருமங்கலத்தில் சற்று முன் 24-03-2020 மாலை 7-.40 மணி அளவிலான அப்டேட்ஸ்

இயக்கத்தில் உள்ளவை
—————-
அரசு மருத்துமனைகள் ஓரு சில தனியார் மருத்துமனைகள் இயங்குகின்றன
எல்லா மருந்து கடைகளும் இயங்குகின்றன
பெட்ரோல் பல்குகள் இயங்குகின்றன.
சில காய்கறி கடைகள் ,சில பலசரக்கு கடைகள்
சில பால் பாக்கெட் கடைகள்
ஏடிம் மையங்கள்

இயங்காதவை
————–
உணவகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன
அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது
தேநீர் கடைகள் ஒன்றிரன்டு மட்டும் இயங்குகின்றன.
ஆட்டோக்க்கள் ஒரு சில மட்டும் (அதுவும் உள்ளூர் பேருந்து நிலையம் அருகில் மட்டும் நான்கைந்து உள்ளன)

எச்சரிக்கை
—————-
சாலை முழுவதும் விளக்குகள் இல்லாததாலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும் விபத்துக்க்கள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுடலாம். ஆகவே தேவையற்று வெளிவருவதை தவிர்க்க வேண்டுகிறோம்!

குறிப்பாக சில பெண்கள் டூவிலர்களில் தனியாக சுற்றுவதை கவனித்தோம்.இவர்கள் துணையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டுகிறோம்.

காவல் துறை ரோந்தில் உள்ளது இருப்பினும் அவசியமல்லாத விசயங்களுக்காக வெளிவருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்

புகைப்படம் 1: ஆனந்தா திரையரங்கு எதிரே சாலையில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகள்ன் கடைகள் அகற்றப்பட்டு காலியாக இருக்கும் காட்சி!
புகைப்படம் 2: எப்ப்போதும் பரபரப்பாக இருக்கும் உசிலைச் சாலையில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருள் சூழ்ந்திருக்கும் காட்சி! ( ஆனந்தா திரையரங்கம் பக்கத்தில் நின்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய பார்வை)
புகைப்படம் 3: உசிலைச் சாலையில் மஹராஜா துணிக்கடையில் இருந்து கிழக்கு நோக்கிய பார்வை
புகைப்படம் 4: மஹராஜா துணிக்கடையில் இருந்து மேற்கு நோக்கிய பார்வை

5 thoughts on “திருமங்கலத்தில் சற்று முன் 24-03-2020 மாலை 7-.40 மணி அளவிலான அப்டேட்ஸ் இயக்கத்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *