
1948ம் ஆண்டின் நோட்புக்
————-
1948ம் ஆண்டின் திருமங்கலம் பள்ளியின் 6ம் வகுப்பு பள்ளிக்கூட நோட்புக் .
புங்கங்குளம் கிராமத்தை சேர்ந்த திரு.K.நடராசன் ஏன்பவர் திருமங்கலம் BHE பள்ளியில் ஆறாம் வகுப்பு VI Bசெக்சனில் படித்துள்ளார்
1949ம் வருடம் VII B செக்சனில் படித்துள்ளார் அவற்றின் பக்கங்களும் உள்ளன.
இதில் முக்கியமாக 1948 ,1949 காலங்களில் என்ன்னவென்ன பாடங்கள் பாடமாக இருந்தன என்பதை அறியமுடிகின்றது(பார்க்க படம் 3)
அதிலும் குறிப்பாக civics எனும் குடிமையியல் எனும் பாடத்தில் சஆரம்ப காலங்களில் ுத்தமாக இருப்பது ,சுகாதாரத்தை பேணுவது பற்றிய பாடங்கள் கொண்டு விழிப்புனர்வு செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. (பார்க்க படம் 5)
கையெழுத்து பயிற்சிக்கு 1980 ,90 காலத்தில் தனியாக கோட்டிட்ட
நோட்டுகள் இருந்தன. ஆனால் 1940 களில் ஒவ்வொரு நோட்புக்கிலும் மாணவர்கள் தாங்களே கோடு வரைந்து கையெழுத்து பயிற்சி மேற்கொண்டனர் என தெரிகிறது (பார்க்க படம் 6)
மை ஊற்றுவது : மாணவர்களுக்கே உரிய அடித்தல்கள், திருத்தல்கள் , எழுதும் பொது பேனாவில் இருந்து மை தானாக கொட்டுவது 1940 காலகட்ட மாணவர்களிடம் இருந்துள்ளது இந்த நோட்டு புத்தகத்தின் சில பக்கங்களில் தெரிகிறது.
குறிப்பு:
திருமங்கலம் BHE பள்ளி என்பது எதை குறிக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தால் கமேண்டில் சொல்லவும். நன்றி.
இப்பதிவு குறித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். திருமங்கலம் குறித்து வேறு பழைய ஆவணங்கள் ( ஓலைச்சுவடி) போன்றவற்றை இன்னொரு பதிவில் அளிக்கின்றோம்.