
[ad_1]
திருமங்கலம் தாலுகா பற்றி 1935ம் வருடம் புவியியல் நூல் ஒன்றில் வெளிவந்த தகவல்கள்.
நூலில் உள்ள சில தகவல்கள் குறித்து விளக்கம்
———–
கச்சேரி என்பது நீதிமன்றம் மற்றும் காவல் மற்றும் அரசு அலுவலகங்களை குறிக்கும்.
முசாபரி பங்களா என்பது டூரிஸ்ட் பங்களா( பயணியர் விடுதி) . நகராட்சி அடுத்து மதுரை சாலையில் அமைந்துள்ளது.
திருமலை நாயக்கர் மண்டபம் என்பது செங்குளம் பகுதியில் இருந்தது குறித்து சில வருடங்கள் முன்பு ஆதாரத்தோடு எழுதியிருந்தோம்.
அமெரிக்கன் மிஷன் ட்ரெயினிங் கலாசாலை என்பது காட்டு பங்களா பள்ளி (காட்டு பங்களா என்பது இரயில் நிலையம் முன்புறம் இன்றைய கற்பக நகர் என்று அறியப்படும் பகுதியில் இயங்கியது) அல்லது நிர்மலா பள்ளியா?
வெள்ளிக்கிழமை சந்தை என்பது இப்போதும் வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டு சந்தையா ? அல்லது வேறு சந்தைகள் இயங்கியதா? என்று தெரியவில்லை,தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்.
பஞ்சாலை ஒன்று இரயில்வே நிலையம் முன்புறம் உள்ள பகுதியில் இருந்ததை வேறு ஓர் ஆவணங்களில் பார்த்தோம் அதை இச்செய்தி குறிப்பிடுகிறது எனலாம்)


[ad_2]

