
@followers வரலாறு அறிவோம்: பாண்டிய நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய திருமங்கலம்
————–
ஆம் ! உண்மை தான்!
பாண்டிய நாட்டை பாண்டிய மன்னர்கள் சிறப்பாக ஆட்சி செய்தது எவ்வளவு உண்மையோ! பாண்டிய மன்னர்களால் பாண்டிய நாட்டுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே பெரும் ஆபத்து பாண்டிய மன்னர்களால் பல முறை வந்தது என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை!
ஆம் இதில் ஒன்று தான் சிங்களர்களால்( இலங்கையின் சிங்களர்களால்) வந்த ஆபத்து!
கி.பி 12ம் நூற்றாண்டில்
பாண்டிய இளவல்கள் (பாண்டிய இளவரசர்களான) சகோதர்களுக்குள் நடந்த யுத்தத்தில்
பாண்டிய இளவலான பராக்கிரம பாண்டியன் என்பவன் இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத் துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர்கள் இலங்காபுரி என்பவன் தலைமையிற் பாண்டிய நாட்டில் புகுந்தனர்.
தமிழகத்தில் பராக்கிரம பாண்டியன் படைகள் மற்றும் சிங்களர்களால் மக்களை கொடுமை செய்தனர், பாண்டிய நாட்டை தாண்டி தமிழகத்தின் ஆட்சியே சிங்களர்களிடம் மாறும் நிலை கூட உருவானது.
இந்நிலையில் மற்றொரு பாண்டிய இளவல் சோழ அரசனின் உதவியை நாட சோழ மன்னன் ,பாண்டிய நாட்டையும் அதன் வழியாக மொத்த தமிழகத்தையும் காப்பாற்ற உறுதி பூண்டார்!
இதற்காக காஞ்சிபுரம் ,மரக்காணம், இன்றைய ஈசிஆர் முதல் அடையாறு வரை உள்ள சென்னை பகுதி என தொண்டை நாட்டை பூர்வீகமாக கொண்டு அப்பகுதியையும் ஆட்சி செய்து கொண்டு சோழர்களின் படைத்தலைவர்களாக விளங்கிய தொண்டைமான்கள் பெரும் போர் செய்து பாண்டிய நாட்டையும் ,தமிழகத்தையும் பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றினர்.
இந்த தொண்டைமான்களின் வழியினர் இன்றும் திருமங்கலம் சுற்றியுள்ள சாத்தங்குடி, மேலத்திருமாணிக்கம், அரசபட்டி, திருமால், பூலாம்பட்டி, தொட்டியபட்டி ,குராயூர்,உலகாணி உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட சாத்தங்குடி, மேலத்திருமாணிக்கம் ,உலகாணி போன்ற ஊர்களில் கிடைத்த பாண்டியர் காலத்து கல்வெட்டுக்கள் தொண்டைமான், பல்லவராயர் வழியினரை பற்றி தெரிவிக்கின்றன.
இவ்வாறு பாண்டிய நாட்டை மட்டுமல்ல தமிழகத்தை காத்த பெருமை திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களையே சாரும்!
இதை பற்றிய விரிவான செய்தியை விரைவில் பதிவு செய்கின்றோம் ( இப்பதிவிற்கு லைக்கை பார்த்து இது பற்றிய விரிவான பதிவை ஆதாரங்களோடு பதிவிடுவோம்)
இப்பதிவில் ஓர் ஆதாரத்தை மட்டும் இணைத்துள்ளோம்.
கமேண்ட் வடிவில் உங்கள் கருத்துக்களை கூறலாம். நன்றி!