
[ad_1]
திரும்பிப் பார்போம்-திருமங்கலம் கோசலை மஹால்
———–
சென்னை ,மதுரை போன்ற நகரங்களில் ரூம்களை தினம் மற்றும் மாத வாடகைக்கு விடும் லாட்ஜ்களை பார்த்திருப்போம்.
அப்படிப்பட்ட ஒரு லாட்ஜ் 1990கள் வரை இருந்தது.
திருமங்கலம் பேருந்து நிலையம் எதிரே இன்று Axis Bank மற்றும் ஆரிய பவன் ஹோட்டல் இருக்கும் இடத்தில் கோசலை மஹால் என்ற பெயரில் பெரிய லாட்ஜ் ஒன்று இயங்கி வந்தது. பல்வேறு ரூம்கள் இருக்கும் தங்குமிடமாக இது செயல்பட்டது.
சொல்லப்போனால்
கோசலை மஹால் திருமங்கலத்தின் முதல் லாட்ஜ் என்று கூட சொல்லலாம்.
1990களின் ஆரம்பங்கள் வரை இந்த லாட்ஜ் இருந்தது. அதன் பின் பல்வேறு கைகள் மாறி ஹோட்டல் இடமாக இன்று மாறி நிற்கிறது.
குறிப்பு:
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படம் உன்னை நினைத்து திரைப்படத்தில் வரும் வேறு ஒரு லாட்ஜின் காட்சி மட்டுமே, கோசலை மஹாலின் உண்மை புகைப்படம் இல்லை.
இந்த தங்குமிடம் பற்றி உங்களிடம் புகைப்படமோ அல்லது தகவல் தெரிந்தவர்கள் உங்கள் தகவலை கமேண்டில் பதிவு செய்யலாம்.

[ad_2]

