பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி, நம் திருமங்கலம் பகுதியில் கி.பி 1600களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது.
திருமங்கலம் வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1600 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் இனத்தைச் சார்ந்த சகோதர்கள்(நல்ல மூக்கன்,சோழ மூக்கன்) இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்நடுகல்லில் காணப்படுபவர்கள் திருமங்கலம் வடகரையைச் சார்ந்த திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்கள் ஆவர்.
மேலும் குறிப்பிட்ட சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் பரம்பரை கோவிலான வடகரை “கம்பங்கழி கருப்பாயி” கோவிலில் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பட உதவி: அகமுடையார்ஒற்றுமை(இணையதளம்)
இந்த வரலாற்றுச் சான்றுகள் மூலம் திருமங்கலம் வடகரை பகுதி கி.பி 1600களுக்கு முன்பே வரலாற்றுச் சிறப்புப் பெற்றிருந்தது என்ற உண்மை தெரிய வருகிறது.இது திருமங்கலத்தில் வாழும் ஒவ்வொருவர்களும் பெருமைப்பட வேண்டிய விடயம் ஆகும்.
Valari weapon used before 1600s Archaeological Evidence(hero stone and ancient valari weapon used at that time) has been found on Thirumangalam vadakarai village