திருமங்கலத்திற்கு ஒரிரு முறை இந்திரா காந்தி வருகை தந்துள்ளார்கள்
ஒர் முறை-லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆக இருந்த போது இந்திரா காந்தி அமைச்சராக பதவி வகித்தார்.1960 களில் அவர் திருமங்கலத்திற்கு வந்திருந்த போது எடுத்த புகைப்படங்களே இவை!
திருமங்கலம் விஸ்வநாத தாஸ் கலையரங்கில்(சந்தைப்பேட்டை) நடைபெற்றக் கூட்டத்தில் இந்திரா காந்தி ஆங்கிலத்தில் பேசுகிறார் இதனை திரு.இராஜாராம் நாயுடு அவர்கள் தமிழில் மொழிபெயர்கிறார்.

படம்: இந்திரா காந்தி ஆங்கிலத்தில் பேசுகிறார் இதனை திரு.இராஜாராம் நாயுடு அவர்கள் தமிழில் மொழிபெயர்கிறார்.
புகைப்படத்தில் உள்ளவர்கள்: இந்திரா காந்தி,இராஜாராம் நாயுடுவுடன் , திருமங்கலத்தின் சிறந்த பெண்மணி திருமதி.இராஜம்மாள் செல்வமணி -மாதர் நலக்குழு சேர்மன்
நன்றி: இப்புகைப்படங்களை நமது Thirumangalam.org தளத்திற்கு வழங்கிய திரு.A.A.S.S.காமராஜ்வேல் நாடார்(செயலர் -பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.இவர் மேற்குறிப்பிட்ட திருமங்கலத்தின் சிறந்த பெண்மணி திருமதி.இராஜம்மாள் செல்வமணி அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு முறை எம்.ஜி.ஆருடன் ,இந்திரா காந்தி திருமங்கலம் பி.கே.என் பள்ளி மைதானத்தில் உரையாற்றி இருக்கிறார்(ஆனால் இப்புகைப்படங்கள் கிடைக்கவில்லை)
Rajaram Naidu
Indhira Gandhi
Mrs.Rajammal Selvamani