குதிரைசாரிகுளம் பெயர் காரணம்-அறிவோம் திருமங்கலம் வரலாறு!

இன்றைக்கு போக்குவரத்திற்கு பஸ்,ரயில்.விமானம் என்ற பல்வேறு விரைவான போக்குவரத்து அம்சங்கள் வந்துவிட்டன.ஆனால் அன்றைய காலத்தில் பரவலாக மாட்டுவண்டிகளும் ,விரைவுப் பயணத்திற்கு குதிரை வண்டிகளும் பயன்பட்டு வந்தன.
இவற்றுக்கு குதிரைகளை, வண்டிகளோடு இணைப்பதற்கு குதிரையைச் சுற்றி கட்டப்படும் சாரியை என்ற பட்டை பயன்பட்டு வந்தது!

குதிரைசாரி என்பதில் சாரிகை,சாரியை என்கிற வார்த்தைகள்- கால்நடைகளையும் வண்டிகளையும் இணைக்கக்கூடிய சுற்றியோடி வருவதாகிய இந்த கழுத்து மற்றும் இடுப்புப் பட்டைகளைக் குறிப்பதாகவும் இந்த கால்நடைகள் போக்குவரத்து மற்றும் போர்க்களங்களில் பயன்பட்டதையும் பழந்தமிழில் இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் உள்ளன.

எ.டு
நிலைக்களம் முச்சாரிகை யொதுங்கு மோரிடத்தும் (ஏலாதி, 12) – இங்கே முச்சாரிகை என்பது யானை, தேர், குதிரை எனும் மூன்று கால்நடை கொண்ட படையை குறிக்கும். இவற்றை கொலைக்களத்திற்கு(போர்களத்திற்கு) பழக்கும் இடமாக நிலைக்களம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முழுப்பாடல்-கீழே

கொலைக்களம் வார்குத்துச் சூதாடு மெல்லை
அலைக்களம் போர்யானை யாக்கு – நிலைக்களம்
முச்சா ரிகையொதுங்கு மோரிடத்து மின்னவை
நச்சாமை நோக்காமை நன்று.

சாரியை பர்றி மேலும் சில குறிப்புகள்(பழந்தமிழ் நூல்களிலிருந்து)

பதினெட்டுச் சாரியையும் (பு. வெ.12, வென்றிப். 13).
ஏர் கெழுதிசையும், சாரி பதினெட்டும் -கம்பராமாயணம் பாடல்

சாரியை என்பது கால்நடைகளை வண்டியோடு இணைக்க பயன்படும் சுற்றோட்டப் பட்டை என்பதால் இப்பெயருடன் குதிரை என்ற பெயரும்( குதிரை+சாரி) என்பதால் இவ்வூரில் ஒருகாலத்தில் குதிரைவண்டிக்காரர்களும் ,குதிரைசாரியை ,குதிரை வண்டிகளை செய்யும் தொழிலாளர்களும் நிறைந்து வாழ்ந்த ஊர் என்பதால் குதிரைசாரிகுளம் என்ற பெயரைப் பெற்றது எனலாம்.

இதனை மெய்பிக்கும் விதமாக வெகுசமிபகாலம் வரை கூட குதிரைசாரி குளத்தில் பெரும்பாலானோர் மாடுகளை பயன்படுத்தி மணல் ,செங்கல் ஏற்றுதல் போன்ற தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் இதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது!
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் இருந்து குதிரைசாரிகுளம் செல்லும் சாலை-ஊரின் தற்போதைய தோற்றம்

இவ்வூருக்கு பழனியாபுரம் என்ற மற்றொரு பெயரும் மக்களால் வழங்கப்பட்டு வருகிறது. குதிரைசாரிகுளம் எனும் இவ்வூரின் வரலாறு விரிவான பதிவாக நம் Thirumangalam Madurai இணையதளத்தில் பின்னாளில் வெளியாகலாம்!

kuthiraisari kuthraisani kuthiraisaarigulam etymology history thirumangalam tirumangalam madurai tamil memes

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo